தெம்பனிசில் புதிய 4 கி.மீ. சைக்கிளோட்டப் பாதை

தெம்பனிசில் புதிய 4 கி.மீ. சைக்கிளோட்டப் பாதை

2 mins read
de2c9641-5fbd-4ef1-a38a-745d05350b54
-

அவென்யூ 1, 4, 5, 8ல் வசிப்போர் வசதியாக எம்ஆர்டி நிலையம் போய் வரலாம்

தெம்­ப­னிஸ் அவென்யூ 1, 4, 5, 8 ஆகி­ய­வற்­றில் வசிப்­ப­வர்­கள் இப்போது மிக­வும் பாது­காப்­பாக, எளி­தாக, வச­தி­யாக தங்­கள் வீடு­களில் இருந்து தெம்­ப­னிஸ் வெஸ்ட் எம்ஆர்டி நிலை­யத்­துக்­கும் 'அவர் தெம்­ப­னிஸ் ஹப்' மையத்­திற்­கும் சைக்­கி­ளோட்­டிச் செல்ல முடி­யும்.

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணையம் நேற்று 4 கி.மீ. சைக்­கி­ளோட்டப் பாதையைத் திறந்­து­விட்­டது.

வீடு­கள், பள்­ளிக்­கூ­டங்­கள், முக்கிய வசதி இடங்­கள், தெம்பனிஸ் மத்­திய பூங்கா, தெம்­ப­னிஸ் பசுமை காட்­டுப் பூங்கா போன்ற பசுமை இடங்­களை அந்­தப் பாதை இணைக்­கிறது.

தெம்­ப­னிஸ் நக­ருக்­குள் இப்போது மொத்­தம் 25 கி.மீ. தொலைவுக்குச் சைக்­கி­ளோட்ட வழி­யும் பூங்கா இணைப்­புப் பாதை­யும் இருப்­ப­தாக சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சர் மச­கோஸ் ஸுல்­கி­ஃப்லி நேற்று புதிய சைக்­கி­ளோட்­டப் பாதையைத் திறந்­து­வைத்தபோது குறிப்­பிட்­டார்.

தெம்­ப­னிஸ் சைக்­கி­ளோட்­டப் பாதை, தெம்­ப­னிஸ், தெம்­ப­னிஸ் ஈஸ்ட், தெம்­ப­னிஸ் வெஸ்ட் ஆகிய மூன்று எம்­ஆர்டி நிலை­யங்­களை இணைக்­கிறது.

தெம்­ப­னிஸ் சைக்­கி­ளோட்­டப் பாதை­யின் முதல்­கட்ட நிறை­வைக் குறிக்­கும் வகை­யில் நேற்று புதிய பாதை திறக்­கப்­பட்­டது. அந்­தப் பாதையைக் குடி­யி­ருப்­பா­ளர்­கள் பல­ரும் ஏற்­கெ­னவே பயன்­ப­டுத்த தொடங்­கி­விட்­டார்­கள் என்று அமைச்­சர் மச­கோஸ் தெரி­வித்­தார்.

பாதை நெடு­கி­லும் பாது­காப்புக் குறி­யீ­டு­களும் வேகத்­தைக் கட்­டுப்­ ப­டுத்­து­வ­தற்­கான அடை­யா­ளங்­களும் பொறிக்­கப்­பட்டு உள்ளன.

சைக்­கி­ளோட்­டி­கள், பாத­சா­ரி­களின் பாது­காப்பை உறு­திப்­படுத்தும் வகை­யில் அந்­தப் புதிய சைக்­கி­ளோட்­டப் பாதை நெடு­கி­லும் ஐந்து பாத­சாரி கடப்­பி­டங்­கள் உள்ளன.

இப்­போது இருக்­கும் 19 சைக்­கிள் கடப்­பி­டங்­க­ளை­யும் சேர்த்து புதிய வச­தி­களும் ஏற்­ப­டுத்­தப்­பட்டு இருப்­ப­தால் சைக்­கி­ளோட்­டி­கள் தெம்­ப­னி­சில் பாது­காப்­பு­மிக்க, தடை­யற்ற சைக்­கி­ளோட்ட அனு­பவத்தைப் பெற­லாம் என்று நிலப் போக்­கு­வரத்து ஆணை­யம் தெரி­வித்­தது.

தெம்­ப­னிஸ் சைக்­கி­ளோட்­டப் பாதைக் கட்­ட­மைப்பு பற்றி 2017ல் அறி­விக்­கப்­பட்­டது.

அதன்­படி, அந்­தக் கட்­ட­மைப்பு இந்த ஆண்டு வாக்­கில் ஏறத்­தாழ 21 கி.மீ. தொலை­வுக்கு விரி­வு­படுத்­தப்­படும்.

இப்­போது தெம்­ப­னி­சில் 14 கி.மீ. சைக்­கி­ளோட்­டப் பாதையை ஆணையம் அமைத்து முடித்து இருக்­கிறது. கார்­களைத் தவிர்க்கும் வகை­யில் 2030ல் 1,300 கி.மீ. சைக்­கிளோட்­டப் பாதையைக் கொண்­டி­ருக்கும் திட்­டங்­க­ள் வகுக்கப் பட்டன.

இப்­போது சிங்­கப்­பூ­ரில் 500 கி.மீ. சைக்­கி­ளோட்­டப் பாதை­கள் உள்­ளன என்று போக்­கு­வ­ரத்­துக்­கான மூத்த நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் பே யாம் கெங் தெரி­வித்து உள்ளார்.

அங் மோ கியோ, பீஷான், புக்­கிட் பாஞ்­சாங்­கி­லும் புதிய சைக்­கி­ளோட்­டப் பாதை­கள் அமைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

ஆணை­யம் சென்ற அக்­டோ­பரில் தாமான் ஜூரோங்­கில் 5.6 கி.மீ. நீளத்திற்கான சைக்­கிளோட்டப் பாதையை அமைத்­தது.

அது ஜூரோங் லேக் மாவட்­டத்தில் 15 கி.மீ. கட்­ட­மைப்­பு­டன் இணைந்து இருக்­கிறது.