ராஃபிள்ஸ் கலங்கரைவிளக்கத்துக்கு சனிக்கிழமைகளில் சுற்றுலா செல்லலாம்

ராஃபிள்ஸ் கலங்கரைவிளக்கத்துக்கு சனிக்கிழமைகளில் சுற்றுலா செல்லலாம்

2 mins read
4638e6f4-2662-4bd7-a7fc-1946fa2af1b4
போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் (இடமிருந்து 2வது) நேற்று மாணவர்களுடன் ராஃபிள்ஸ் கலங்கரைவிளக்கத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரின் ஆகப் பழ­மை­யான இரண்­டா­வது கலங்­கரைவிளக்­கம் ராஃபிள்ஸ் கலங்­கரைவிளக்­கம்.

அது, முன்பு ஆண்­டுக்கு ஒரு முறை மட்­டும் பொதுமக்­க­ளுக்­குத் திறந்து விடப்­பட்­டது. இப்­போது காலக்­கி­ரம முறைப்­படி வருகை­யாளர்­களை வர­வேற்க கலங்­கரை விளக்­கம் காத்து இருக்­கிறது.

பொது­மக்­கள் அந்­தக் கலங்­கரைவிளக்­கத்­திற்­குச் செல்ல இப்­போது முன்­ப­திவு செய்­ய­லாம்.

சிங்­கப்­பூர் கடல்­துறை, துறை­முக ஆணை­யம் ஏற்­பாட்­டில் அங்கு செல்­வ­தற்­கான பய­ணங்­கள் இடம்­பெறுகின்­றன. அதற்­கான சுற்று லாவை 'லயன் ஹார்ட்­லேண்டர்ஸ்' நிறு­வ­னம் நடத்­து­கிறது.

போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ் ஈஸ்­வ­ரன் நேற்று அந்­தக் கலங்­கரைவிளக்­கத்­திற்­குச் ெசன்று சுற்­று­லா­வைத் தொடங்கி வைத்­தார்.

மேலும் பல சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு கடல்­து­றையை அறி­மு­கப்­ப­டுத்­து­வதும் சிங்­கப்­பூ­ரின் கடல்­துறை பாரம்­ப­ரி­யத்தை அவர்­கள் புரிந்­து­கொள்­ளு­மாறு செய்­வ­தும் இந்­தச் சுற்­று­லாத் திட்­டத்­தின் நோக்­கம் என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

கடல்­துறை தொடர்­பான கல்வித்­ திட்டங்களில் சேர்ந்து இருக்­கும் 14 மாணவர்­களும் அமைச்­ச­ரு­டன் நேற்றுப் பய­ணத்­தில் கலந்­து­கொண்டனர். ராஃபிள்ஸ் கலங்­கரைவிளக்­கத்­துக்­கான சுற்­றுலா இளைய சிங்கப்­பூ­ரர்­களை ஈர்க்­கும். கடல் தொழில்­து­றை­யில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றி அவர்­கள் தெரிந்து­கொள்ள இது உத­வும் என்று திரு ஈஸ்­வ­ரன் நம்­பிக்­கைத் தெரி­வித்தார்.

மரினா சவுத் பிய­ரில் இருந்து அந்த 5 மணி நேர பய­ணம் தொடங்­கும். மரினா சவுத் பிய­ரில் ஆணை யத்­தின் சிங்­கப்­பூர் கடல்­துறைக் கலைக்­கூ­டத்தை வரு­கை­யா­ளர்­கள் கண்டு பல விவ­ரங்­களைத் தெரிந்து­கொள்­ள­லாம். அங்­கி­ருந்து புறப்­பட்டு 75 நிமிடம் பய­ணம் செய்து புலாவ் சடுமு தீவை அடை­ய­லாம். அந்­தத் தீவில்­தான் ராஃபிள்ஸ் கலங்­க­ரை­வி­ளக்­கம் உள்­ளது.

அதற்­கான சுற்­றுலா ஒவ்­வொரு மாதத்­தி­லும் 2வது, 4வது சனிக்­கி­ழ­மை­களில் இடம்­பெ­றும். இணையம் வழி முன்­ப­திவு செய்­ய­லாம். 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்­டு­மே­ அனு­மதி உண்டு.

கட்­ட­ணம் $62.71. சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் கல்வி நிலை­யங்­க­ளைச் சேர்ந்த மாண­வர்­க­ளுக்கு $34.70.