சிறப்பு உதவி தேவைப்படும் பாலருக்கு புது செயல்திட்டம்

சிறப்பு உதவி தேவைப்படும் பாலருக்கு புது செயல்திட்டம்

2 mins read
b2c626ae-e058-4042-88f6-0e393b92c037
ஃபெர்ன்வேல் புளோக் 455ல் செயல்படும் மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவன ஸ்பார்க்கல்டாட்ஸ் பாலர்பள்ளியில் அமைக்கப்பட்டு இருக்கும் உடற்பயிற்சி அறை. படம்: மசெக சமூக அறநிறுவனம் -

பாலர்­பள்­ளி­களில் 3-6 வய­து உள்ள பிள்­ளை­க­ளுக்கு இட, சாதன வச­தி­கள் மேம்பாடு

பல பாலர்­பள்­ளி­கள், சிறப்பு உதவி தேவை உள்ள மூன்று முதல் ஆறு வய­து உள்ள பிள்­ளை­க­ளுக்கு ஆதரவு அளிக்­கும் வகை­யில் தங்­க­ளு­டைய இட, சாதன வச­தி­களை அதி­கப்­ப­டுத்தி வரு­கின்­றன.

இளம்­ப­ருவ மேம்­பாட்டு முகவை என்ற அமைப்­பின் தலை­மை­யில் ஒரு முன்­னோ­டித் திட்­ட­மாக பாலர்­பள்­ளி­கள் இந்த முயற்­சி­களை எடுத்து இருக்­கின்­றன.

பொருத்­த­மான வளர்ச்சி அடைய உதவி தேவைப்­படும் நிலை­யில் இருக்­கும் பிள்­ளை­க­ளுக்குச் சிறப்பு ஆத­ரவை வழங்­கும் வகை­யில் முழு­நேர நிபு­ணர்­களும் சுகா­தார நிபு­ணர்­களும் அந்­தப் பள்­ளி­களில் வேலை­களில் அமர்த்­தப்­பட்டு இருக்­கி­றார்­கள்.

இதற்கு வகை­செய்­யும் 'எல்­லாரை­யும் உள்­ள­டக்­கும் ஆத­ர­வுச் செயல்­திட்­டம்' என்ற ஒரு திட்­டம் சென்ற அக்­டோ­ப­ரில் தொடங்­கப்­பட்­டது. அதன்­படி பாலர்­க­ளுக்குப் பள்­ளிக்­கூ­டத்­தி­லேயே சேவை­கள் கிடைப்­ப­தால் பிள்­ளை­க­ளின் பெற்­றோர் பாலர்­பள்­ளி­க­ளுக்­கும் சிறார் தொடக்க உதவி நிலை­யங்­களுக்கும் இடை­யில் செல்ல வேண்­டிய பயண நேரம் மிச்­சப்­படும்.

ஃபெர்ன்­வேல் புளோக் 455ல் செயல்­படும் மசெக சமூக அற­நிறு­வ­னத்­தின் 'ஸ்பார்க்­கல்டாட்ஸ்' பாலர்­பள்ளி இதற்கு தயா­ரா­கும் முதல் பாலர்­பள்­ளி­களில் ஒன்­றாகும்.

இது­வரை இந்­தப் பள்­ளி­யில் சிறப்பு உதவி தேவைப்­படும் ஏழு சிறார்­கள் சேர்க்­கப்­பட்டு இருக்­கிறார்­கள். அவர்­கள் அனை­வ­ரும் சென்ற அக்­டோ­ப­ரில் இருந்து புதிதாக சேர்க்­கப்­பட்­ட­வர்­கள்.

ஃபெர்ன்­வேல் நிலை­யத்­தில் சிறார்­கள் முத­லில் விளை­யாடி ஓய்­வெ­டுத்­துக்கொண்டு பிறகு வகுப்பறை நட­வ­டிக்­கை­களை தொடங்­கும் வகை­யில் ஏற்­பா­டு­கள் உள்ளன. அங்கு உடற்­ப­யிற்சி அறை ஒன்று உள்­ளது. அலங்கார விளக்கு­கள், இசை­யு­டன் கூடிய அறை­யும் இருக்­கிறது.

மேலும் மூன்று நிலை­யங்­களில் இத்­த­கைய சிறார்­க­ளைச் சேர்ப்­பதற்­கான நட­வ­டிக்­கை­கள் தொடங்­கின. பிப்­ர­வ­ரி­யில் 'என்­டி­யுசி ஃபர்ஸ்ட் கேம்­பஸ்' அமைப்பு நடத்­தும் மேலும் இரண்டு நிலை­யங்­கள் இதற்கு ஆயத்­த­மா­கி­வி­டும்.

பாலர்­பள்­ளி­கள் பல­த­ரப்­பட்ட பிள்­ளை­களை உள்­ள­டக்க வேண்டும் என்­ப­தற்­காக 2019ல் சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்சு ஒரு பணிக்­கு­ழுவை அமைத்­தது.

அந்­தப் பணிக்­குழு முன்­வைத்­துள்ள ஒரு பரிந்­து­ரை­யை­யொட்டி இந்த முன்­னோடி செயல்­திட்­டம் இடம்­பெ­று­கிறது.