ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் நிறுவனம் இரண்டு சுற்றுலா கப்பல் மகிழ் உலாக்களை ரத்து செய்து இருக்கிறது.
அதன் ஊழியர்களிடத்தில் கொவிட்-19 தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது எடுக்கப்பட்டு இருக்கிறது என்று அந்த நிறுவனம் நேற்று தெரிவித்தது.
இந்த ரத்து நடவடிக்கையை அடுத்து இன்றும் வரும் வியாழக்கிழமையும் 'குவாண்டம் ஆஃப் த சீஸ்' உல்லாசக் கப்பலில் மகிழ் உலா பயணம் மேற்கொள்ள பயணச்சீட்டுகளை வாங்கியிருந்த வாடிக்கையாளர்கள் அந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

