செய்திக்கொத்து

விருந்தோம்பல் துறையின் சவால்களும் மாற்றங்களும்

சிங்கப்பூரில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக இதர துறைகளைப் போலவே விருந்தோம்பல் தொழில்துறையும் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.

சிங்கப்பூருக்கு வருவோர் எண்ணிக்கை வரலாறு காணா அளவுக்குக் குறைந்துவிட்டது. சென்ற ஆண்டில் இங்கு வந்த அனைத்துலகப் பயணிகள் ஏறத்தாழ 330,000 பேர்தான். கடந்த 2020ல் இந்த எண்ணிக்கை 2.7 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இங்கு அவர்கள் செலவிட்ட தொகையும் பெரிதும் குறைந்துவிட்டது.

தொற்றுக்கு முன்னதாக 2019ல் சிங்கப்பூருக்கு வந்த பயணிகளின் வருடாந்திர எண்ணிக்கை 19.1 மில்லியன். அவர்கள் செலவிட்ட தொகை ஏறக்குறைய $28 பில்லியன். ஹோட்டல் அறைகள் நிறைவு விகிதம் 2019ல் சுமார் 87% ஆக இருந்தது. அது 2021ல் ஏறக்குறைய 56% ஆகக் குறைந்துவிட்டது. இந்தத் துறையைச் சேர்ந்த அனுபவமிக்க ஊழியர்கள் சிலர் விலகிவிட்டாலும் பலரும் நம்பிக்கையுடன் தொடர்ந்து சமாளித்து வருகிறார்கள்.

இந்நிலையில், தொற்று காரணமாக ஹோட்டல்துறை பெரிய அளவில் தனது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டதாக சிங்கப்பூர் ஹோட்டல் சங்கம் கூறியது. சில ஹோட்டல்கள் தொழில் நுட்பங் களைப் பயன்படுத்தி உற்பத்தித்திறனை அதிகரிக்கத் தொடங்கி உள்ளன.

இதன் தொடர்பில் சிங்கப்பூர் பயணத்துறை கழகமும் இதர அமைப்புகளும் ஹோட்டல்களுக்கு உதவுகின்றன.

தகவல் தொழில்நுட்ப ஊழியருக்கு அதிக தேவை; சம்பளம் கூடுகிறது

உலகில் தகவல்தொழில்நுட்பத் துறை அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் அந்தத் துறையைச் சேர்ந்த வல்லுநர்களுக்குத் தேவை அதிகமாகி உள்ளது.

திறனாளர்களை ஈர்க்கும் போட்டியில் முதன்மையில் வர முதலாளிகள் விரும்புவதால் அத்தகைய ஊழியர்களின் சம்பளம் கூடுகிறது. பற்றாக்குறை அதிகமாகிறது என்று கவனிப்பாளர்கள் கூறுகிறார்கள்.

ஊழியர்கள் வேலை மாறும் போக்கு காரணமாக சம்பளம் 15% முதல் 20% கூடுவதாக 'மேன்பவர்குருப்' என்ற நிறுவனத்தின் சிங்கப்பூர் நிர்வாகி லிண்டா டியோ கூறினார். ஊழியர்களுக்கு நிலவும் பற்றாக்குறை காரணமாகவும் வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்க கடும் கட்டுப்பாடுகள் நடப்பில் இருப்பதாலும் தங்களுக்குத் தேவைப்படக்கூடிய தொழில்நுட்ப ஊழியரை வேலையில் சேர்ப்பது இங்குள்ள நிறுவனங்களுக்கு இன்னும் சிரமமாகி இருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தாதியருக்கு தேவை அதிகம்; மருத்துவமனைகள் தீவிர முயற்சி

சிங்கப்பூரில் தாதியருக்குத் தேவை மிக அதிகமாக இருக்கிறது. பலரும் குறிப்பாக வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அந்த வேலையை விட்டு விலகி சொந்த நாட்டுக்குத் திரும்ப முடிவு செய்துவிட்டார்கள் என்று மருத்துவமனை சகாக்கள் தெரிவிக்கிறார்கள்.

சிங்கப்பூரில் 2021ஆம் ஆண்டு முதல் பாதியில் கிட்டத்தட்ட 1,500 தாதியர் வேலையைவிட்டு விலகிவிட்ட தாக சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி சென்ற நவம்பரில் தெரிவித்து இருந்தார்.

தொற்றுக்கு முன்னதாக தாதியர் வேலை விலகும் வருடாந்திர எண்ணிக்கை 2,000 ஆக இருந்துவந்தது.

கொவிட்-19 தொற்று பல வழிகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. என்95 முகக்கவசத்தை அணிந்த படியே பணியில் இருக்கவேண்டிய நிலை தாதியருக்கு எப்போதுமே இருந்துவருகிறது. இதனால் அவர்கள் நடு மூக்கில் தழும்பு போன்ற ஓர் அடையாளமே ஏற்பட்டு விட்டது என்று இங் டெங் ஃபோங் பொது மருத்துவ மனையின் உதவி மருந்தகத் தாதி குவோ சாசா கூறினார்.

இதனிடையே, இது பற்றி கருத்து தெரிவித்த 'ஏபெர் கேர்' என்ற சுகாதார பராமரிப்புத்துறை ஊழியர் சேர்ப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ஜோ ஓங், நீண்டநேர வேலை, கொவிட்-19 கிருமி தொற்றிவிடும் என்ற அச்சம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக தாதியர்கள் பதவி விலகிவிட்டதாகத் தெரிவித்தார்.

வேலைகளை மாற்றி அமைத்து அதன் மூலம் ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சிகளை சுகாதாரப் பராமரிப்பு அமைப்புகள் எடுத்து வருகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!