புத்தாண்டு மகிழ்ச்சியில் இல்லப் பணிப்பெண்கள்

புத்தாண்டு மகிழ்ச்சியில் இல்லப் பணிப்பெண்கள்

1 mins read
9024c268-6a62-479d-9846-c6a42e9eee30
-

சீனப் புத்­தாண்டு கொண்­டாட்ட காலத்­தின்­போது இல்­லப் பணிப்­பெண்­களைக் கொண்­டாட்ட மகிழ்ச்­சி­யில் திளைக்க செய்­யும் முயற்­சி­யாக அவர்­கள் ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் செந்­தோ­சா­வில் உள்ள தென்­கி­ழக்கு ஆசிய வளர்ப்பு மீன் காட்­சிக் கூடத்­துக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­ட­னர்.

அவர்­கள் சுமார் 100 பேர் வார விடு­முறை நாளான நேற்­றுக் காலை வளர்ப்பு மீன் காட்­சிக் கூடத்­தில் மீன்­க­ளு­டன் படம் எடுத்துக்கொண்­ட­னர்.

அந்த மகிழ் உலா­வுக்கு வெளி­நாட்டு ஊழி­யர், வெளி­நாட்டு இல்­லப் பணிப்­பெண்­கள், உடற்­கு­றை­யா­ளர்­கள் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­னர்­க­ளுக்­கும் ஆத­ரவு அளிக்­கும் 'எச்­ஐஏ' என்ற அமைப்பு ஏற்­பாடு செய்­தது. இந்த ஆண்டு ஜன­வரி 23 முதல் வாரா­வா­ரம் இந்த மகிழ் உலா இடம்­பெ­று­கிறது.

இதில் மொத்­தம் 1,500 வெளி­நாட்டு இல்­லப் பணிப்­பெண்­கள் சிங்­கப்­பூர் விலங்கு காட்சிசாலை, நகர்ப் பகு­தி­கள் உள்­ளிட்ட பல்­வேறு கவர்ச்சி இடங்­க­ளுக்­கும் அழைத்து செல்­லப்­ப­டு­வார்­கள்.

வெளி­நாட்டு இல்­லப் பணிப்­பெண்­க­ளின் நல்­வாழ்­வை­யும் மன­ந­ல­னை­யும் மேம்­ப­டுத்த உத­வும் இந்­தத் திட்­டம் மார்ச் முடிவு வரை இடம்­பெ­றும்.

பொது­மக்­கள் தாங்­கள் பயன்­படுத்­தா­மல் ஒரு பயண நிறு­வ­னத்­திற்கு அன்­ப­ளிப்­பாக அளித்த சுற்­றுலா பற்­றுச்­சீட்­டு­க­ளைக் கொண்டு அந்த மகிழ்­உ­லா­வுக்கு ஏற்­பாடு செய்­யப்­ப­டு­கிறது.