கல்வி அமைச்சு பாலர் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த சில ஆண்டு
களாகப் படிப்படியாக உயர்ந்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் கூடுதல் பாலர் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
2014ஆம் ஆண்டில் ஐந்து
பள்ளிகளுடன் கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகள் தொடங்கின. அப்போது அவற்றில் 250 மாணவர்கள் பயின்றனர்.
தற்போது கல்வி அமைச்சின் 43 பாலர் பள்ளிகளில் 7,500 மாணவர்கள் பயில்கின்றனர். அடுத்த ஆண்டு மேலும் ஏழு பாலர்
பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2024ல் ஐந்து பாலர் பள்ளிகளும் 2025ல் இரண்டு பாலர் பள்ளிகளும் திறக்கப்படும்.
இதன்மூலம் மொத்தம் 57 பாலர் பள்ளிகள் இருக்கும். அவற்றில் 7,900 மாணவர்கள் பாலர் பள்ளி ஒன்றாம் வகுப்புகளில் சேர்ந்து பயிலலாம்.
தங்கள் பிள்ளைகளை அடுத்த ஆண்டு கல்வி அமைச்சின் பாலர் பள்ளி ஒன்றாம் வகுப்பில் பதிவு செய்ய விரும்பும் பெற்றோர்,
பிப்ரவரி 4ஆம் தேதி முதல்
பிப்ரவரி 8ஆம் தேதி வரை கல்வி அமைச்சு பாலர் பள்ளியின்
இணையப்பக்கம் மூலம் பதிவு செய்யலாம். 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் தேதியிலிருந்து 2019ஆம் ஆண்டு 1ஆம் தேதி வரை பிறந்த குழந்தைகள் கல்வி அமைச்சு பாலர் பள்ளிகளில் சேர்ந்து பயில பெற்றோர் பதிவு செய்யலாம்.
சிறுவர்கள் சிங்கப்பூரர்கள்
அல்லது நிரந்தரவாசிகளாக இருக்க வேண்டும். விண்ணப்ப முடிவுகள் மார்ச் 31ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்படும்.
பாலர் கல்வியின் தரத்தை உயர்த்தவும் தரமான, கட்டுபடியான விலையில் பாலர் கல்வியை வழங்கவும் கல்வி அமைச்சு பாலர் பள்ளிகள் தொடங்கி வைக்கப் பட்டன. அதுமட்டுமல்லாது, பாலர் கல்வியில் சிறந்த கற்றல் உத்திகளை நடைமுறைப்படுத்தவும் கல்வி அமைச்சு பாலர் பள்ளிகள் இலக்கு கொண்டுள்ளன.
உதாரணத்துக்கு, விளையாட்டு மூலம் கல்வி கற்றல் உத்தி பயன்படுத்தப்படுகிறது.
மாணவர்களின் வெவ்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய கடந்த சில ஆண்டுகளாக கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகள் பல்வேறு திட்டங்களை அறிமுகப்
படுத்தியுள்ளன.
எடுத்துக்காட்டாக, மேஃபிளவர் நிலையத்தில செவித் திறன் குறைபாடு உள்ள மாணவர்களுக்குத் தேவையான திட்டங்கள் அறி
முகப்படுத்தப்பட்டன.
மேம்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிறப்புத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட ஏழு பாலர் பள்ளிகளில் அதுவும் ஒன்று.
மற்ற ஆறு பாலர் பள்ளிகளை மக்கள் செயல் கட்சி சமூக அறநிறுவனம், என்டியுசி ஃபர்ஸ்ட்
கேம்பஸ், சிங்கப்பூர் பிசி பீஸ் ஆகியவை நடத்துகின்றன.
கல்வி அமைச்சு பாலர் பள்ளி
களின் பாடத்திட்டத்தின்கீழ் உள்ளூர் கலாசாரம், பாரம்பரியம் பற்றி மாணவர்கள் கற்றுக்கொள்
கின்றனர். பிற இனத்தவர்களைப் புரிந்துகொண்டு அவர்களை மதிக்க மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
உதாரணத்துக்கு, கிராஞ்சியில் உள்ள கல்வி அமைச்சு பாலர் பள்ளி மாணவர்களுக்குப் பாரம்பரிய
இந்திய உணவு வகைகளைத்
தயாரிக்க பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தாய்மொழி கலாசார தினத்தையொட்டி இந்தப் பாடம் நடத்தப்பட்டது. எம்கே@வெலிங்டன் பாலர் பள்ளி மாணர்வர்களுக்குப் பாரம்பரிய மலாய் பலகாரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்பள்ளியைச் சேரந்த மாணவர்களுக்கு மலாய் கலாசாரம் பற்றி கற்பிக்கப்பட்டது.

