தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$13.7 மில்லியன் இழந்த ஓசிபிசி வாடிக்கையாளர்கள்

1 mins read
449f5e59-0f82-4221-83d7-4697256f063e
-

ஓசிபிசி வங்கி வாடிக்கையாளர்களைக் குறிவைத்து குறுஞ்செய்திகள் மூலம் விரிக்கப்பட்ட மோசடி வலையில் மொத்தம் 790 பேர் சிக்கினர். வாடிக்கை யாளர்களை ஏமாற்றிய மோசடிக்காரர்கள் மொத்தம் $13.7 மில்லியனைப் பறித்தனர். இந்நிலையில், நல்லெண்ணம் அடிப்படையில் பணம் இழந்த தமது வாடிக்கையாளர்களுக்கு ஓசிபிசி உதவியுள்ளது.

இழந்த தொகை ழுழுவதையும் அது தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

கடந்த சில வாரங்களாக மோசடிப் பரிவர்த்தனைகள் நடத்தப்படவில்லை என்று சிங்கப்பூரின் இரண்டாவது ஆகப் பெரிய வங்கியான ஓசிபிசி கூறியது.

தனது வாடிக்கை யாளர்களின் பணம் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய முழுக் கடப்பாடு கொண்டுள்ளதாக அது தெரிவித்தது.