தலைசிறந்த 50 மதுக்கூடங்களில் ஒன்று

தலைசிறந்த 50 மதுக்கூடங்களில் ஒன்று

2 mins read
ae19b87b-7417-42db-a470-0875feeb0e05
-
multi-img1 of 2

கொஞ்­சம் கலா­சா­ரம், கொஞ்­சம் புதுமை. இரண்­டும் கலந்த கல­வை­யாக விளங்­கு­கிறது 'தி எலி­ஃபண்ட் ரூம்' மதுக்­கூ­டம். 'ஆயுர்­வேதா', 'மிஸ்­டர் டெஸ்­கார்', 'கோல்­டுஸ்­மித்', 'பஃப்லோ ரோடு', 'சட்னி' போன்ற பெயர்­களில் புது­வித 'காக்­டெய்ல்ஸ்' பானங்­க­ளைச் சுவைக்க விரும்­பு­வோர், தெக் லிம் சாலை­யில் உள்ள இந்த மதுக்­கூ­டத்தை நாடு­வர்.

மதுக்­கூ­டத்தை 33 வயது யுக்­னேஸ் சுசேலா, செப்­டம்­பர் 2019ஆம் ஆண்டு திறந்­தார்.

"இந்­திய மது­பான வகை­களில் தரம் அதி­கம் இல்லை என்ற தவ­றான கருத்து மக்­க­ளி­டையே நில­வு­கிறது. ஆனால் எங்­க­ளது 'காக்­டெய்ல்ஸ்' வகை­களை ருசித்து பார்த்­தால் அந்­தக் கருத்து நிச்­ச­யம் மாறும். பஞ்­சாப் மாநி­லத்­தின் பாஸ்­மதி அரிசி வோட்கா, 'கிரீடி ஏஞ்­சல்ஸ்' என்ற அதிக விலை கொண்ட இந்­தி­யன் விஸ்கி போன்­ற­வற்றை நாங்­கள் விற்­பனை செய்­கி­றோம்," என்­றார் யுக்­னேஸ்.

"சிங்­கப்­பூ­ரின் லிட்­டில் இந்­தியா என்­றாலே முஸ்­தஃபா, ரேஸ் கோர்ஸ் சாலை போன்ற பெயர்­களே மக்­க­ளின் ஞாப­கத்­திற்கு வரும். நாங்­கள் லிட்­டில் இந்­தி­யா­வின் 18ஆம் நூற்­றாண்டு வர­லாற்றை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு புதிய பானங்­க­ளைத் தயா­ரித்­துள்­ளோம். இத­னால், லிட்­டில் இந்­தியா பகு­தி­யி­லுள்ள சாலை­க­ளின் பெயர்­களை மக்­கள் அறிந்­திட முடி­கிறது," என்­றார் அவர்.

உடல் ஆரோக்­கி­யத்­தை­யும் மைய­மா­கக் கொண்டு இந்த நவீன மதுக்­கூ­டத்­தில் மது­பா­னங்­கள் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. உதா­ர­ணத்­திற்கு, 'ஆயுர்­வேதா' என்ற பானத்­தில் நில­வேம்பு, நெல்­லிக்­கனி, திராட்­சை­கள் போன்­றவை சேர்க்­கப்­பட்­டி­ருக்­கும். 'த கீர்' என்ற பெயர் கொண்ட மது­பா­னத்­தில் ஏலக்­காய், தேங்­காய் போன்­றவை உள்­ளன.

மது­பா­னங்­க­ளுக்கு ஏற்ற உணவு வகை­களும் இந்த மதுக்­கூ­டத்­தில் விற்­கப்­ப­டு­வது மற்­று­மொரு சிறப்பு.

இந்­திய பொரித்த கோழி 'பர்­கர்', பலாப்­பழ இறைச்சி உருண்­டை­கள், மூன்று வகை சட்­னி­யு­டன் அப்­ப­ளம், கரம் மசாலா கல­வை­

யு­டன் சுண்­டல் ஆகி­யவை வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டையே பிர­ப­ல­மாக உள்­ளன.

மதுக்­கூ­டத்­தில் வழங்­கப்­படும் பானங்­களில் பயன்­ப­டுத்­தப்­படும் தனித்­து­வ­மான இந்­திய நறு­ம­ணப் பொருள்­களும் மசாலா பொருள்­களும் கடை­யின் மேசை­களை அழகு­ப­டுத்­து­வ­து­டன் வரு­வோ­ரின் கலந்­து­ரை­யா­ட­லுக்கு மையப் பொருள்­க­ளா­க­வும் உள்­ளன.

கொவிட்-19 சூழல் ஒரு பக்­கம், மதுக்­கூ­டங்­க­ளுக்­கி­டையே பயங்­கர போட்டி மறுபக்­கம். இவ்­வாறு கடந்த சில மாதங்­கள் சற்று சவால்­மிக்­க­தாக அமைந்­த­போ­தும் மக்­களின் வர­வேற்பு அமோ­க­மாக உள்­ள­தாக யுக்­னேஸ் தெரி­வித்­தார்.

எல்லா இனத்­த­வ­ருக்­கும் ஏற்ற சூழ­லைத் தரும் 'தி எலி­ஃபண்ட் ரூம்', சிங்­கப்­பூ­ரின் தலை­சி­றந்த 50 மதுக்­கூ­டங்­கள் பட்­டி­ய­லில் இடம்­பெற்­றுள்­ளது. ஆசி­யா­வின் சிறந்த ஐம்­பது மதுக்­கூ­டங்­கள் பட்­டி­ய­லி­லும் இடம்­பெற வேண்­டும் என்­பது தமது அடுத்த இலக்கு என்­றார் யுக்­னேஸ்.