கால்வாயில் இரட்டையரின் சடலங்கள்: தந்தைக்கு மனநலப் பரிசோதனை

கால்வாயில் இரட்டையரின் சடலங்கள்: தந்தைக்கு மனநலப் பரிசோதனை

1 mins read
e87dc6c5-074d-444f-b8f9-dc549787a2e9
ஈதன் யாப் இ செர்னைக் கொலை செய்ததாக 48 வயது சிங்கப்பூரரான சேவியர் யாப் ஜுங் ஹோன்மீது கடந்த வாரம் குற்றம் சாட்டப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அப்பர் புக்கிட் தீமாவில் உள்ள கால்வாயில் 11 வயது இரட்டையர் மாண்டு கிடந்தது கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களுடைய தந்தை மனநலப் பரிசோதனைக்காக சாங்கி சிறை வளாகத்தில் உள்ள மருத்துவ நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஈதன் யாப் இ செர்னைக் கொலை செய்ததாக 48 வயது சிங்கப்பூரரான சேவியர் யாப் ஜுங் ஹோன்மீது கடந்த வாரம் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த மாதம் 21ஆம் தேதி மாலை 4.23 மணிக்கும் 6.25 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் கிரீன்ரிட்ஜ் கிரசெண்ட்டில் உள்ள சிறுவர் விளையாட்டு இடத்துக்கு அருகில் உள்ள கால்வாயில் தம்முடைய மகனை யாப் கொன்றதாக நம்பப்படுகிறது. ஈதனைப் போலவே அவரது இரட்டைச் சகோதரரான ஆஷ்டன் யாப்பும் கால்வாயில் பேச்சுமூச்சின்றி காணப்பட்டார். இருவரும் மாண்டுவிட்டதாக சம்பவ இடத்தில் அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கு பிப்ரவரி 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.