நம்பிக்கை குறைவாக உள்ளது

நம்பிக்கை குறைவாக உள்ளது

2 mins read
b284badb-e7b7-4a57-bad3-7fa6e054abc1
-

உற்பத்தி, சேவைகள் துறைகளில் வர்த்தக நிலவரம் குறித்த அச்சம் நிலவுகிறது

உற்­பத்தி, சேவை­கள் துறை­களில் நிறு­வ­னங்­க­ளி­டையே வர்த்­தக ரீதி­யான நம்­பிக்கை குறைந்து காணப்­படுவது தெரி­ய­வந்­துள்­ளது. புதிய கொவிட்-19 கிருமி வகை­கள் தலை­தூக்­குவது, விநி­யோ­கச் சங்­கிலி எதிர்­நோக்­கும் சவால்­கள் ஆகி­யவை இதற்­கான கார­ணங்கள்.

சென்ற ஆண்­டின் கடைசி காலாண்­டை­விட இவ்­வாண்­டின் முற்பாதியில் வரத்­தக நில­வ­ரம் சாத­க­மாக இருக்­கும் என்று எட்டு விழுக்­காட்டு உற்­பத்தி நிறு­வ­னங்­கள் நம்­பு­கின்­றன. பொரு­ளி­யல் மேம்­பாட்டு வளர்ச்சிக் கழகம் நடத்­திய கருத்­தாய்­வில் இந்த விவ­ரம் தெரி­ய­வந்­தது. சென்ற ஆண்டு அக்­டோ­பர் மாதம் நடத்­தப்­பட்ட கருத்­தாய்­வில் இந்த விகி­தம் 16 விழுக்­கா­டா­கப் பதி­வா­னது.

சேவை­கள் துறை­யில் 14 விழுக்­காட்டு நிறு­வ­னங்­கள் இவ்­வாண்­டின் முற்­பாதி நில­வ­ரம் சாத­க­மாக இருக்­கும் எனக் கரு­து­கின்­றன. இதற்கு முன் நடத்­தப்­பட்ட கருத்­தாய்­வில் பதி­வா­ன­தைக் காட்­டி­லும் இந்த விகி­தம் ஐந்து விழுக்­காடு குறைந்­துள்­ளது. கடந்த ஆண்­டு இறுதியின் பண்­டி­கைக் காலத்­தின்­போது அடுத்த ஆறு மாதங்­க­ளுக்­கான முன்­னு­ரைப்பு இடம்­பெற்­ற­தாக புள்ளி விவ­ரத் துறை தெரி­வித்­தது.

போக்­கு­வ­ரத்­துப் பொறி­யி­யல் துறை­யில்­தான் நம்­பிக்கை ஆக அதி­க­மாக இருக்­கிறது. இத்­து­றை­யின் 54 விழுக்­காட்டு நிறு­வ­னங்­கள் வரும் ஜூன் மாதம் வரை நிலைமை சாத­க­மாக இருக்­கும் என்று நம்­பு­கின்­றன. இந்­தத் துறை­யில் இடம்­பெ­றும் ஆகா­ய­வெ­ளிப் பிரி­வில் விமா­னங்­க­ளைப் பழு­து­பார்க்­கும் நட­வ­டிக்­கை­கள், மறு­சீரமைப்பு வேலை­கள் உள்­ளிட்­ட­வற்­றுக்­கான தேவை தொடர்ந்து அதி­க­ரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. கூடு­த­லான நாடு­கள் எல்­லைக் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்தி­வ­ரு­வது இதற்­குக் கார­ணம் என்று பொரு­ளி­யல் வளர்ச்சிக் கழகம் கூறி­யது.

உயி­ரி­யல் மருத்­து­வத் துறை­யிலும் நிறு­வனங்கள் நம்­பிக்­கை­யுடன் உள்­ளன. இவ்­வாண்­டின் முற்­பாதி சாத­க­மாக அமை­யும் என்று இத்­து­றை­யில் 16 விழுக்­காட்டு நிறு­வ­னங்­கள் நம்­பு­கின்­றன. குறிப்­பாக மருத்­து­வத் தொழில்­நுட்பத் துறை­யின் வளர்ச்சி இதற்­குக் கார­ணம்.

கணினி நிர­லாக்­கம் போன்ற சேவை­க­ளுக்­கான தேவை அதி­கரிக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. அத­னால் வர்த்­தக நில­வ­ரம் சாத­க­மாக அமை­யும் என தொடர்பு, தக­வல் துறை எதிர்­பார்ப்­ப­தா­கப் புள்ளி விவ­ரத் துறை குறிப்­பிட்­டது. உல­க­ள­வில் பொரு­ளி­யல் சூழல் மேம்­படும் என்று கணிக்­கப்­பட்­டுள்­ள­தால் நிதி, காப்­பு­று­தித் துறைக்­கும் வர்த்­தக நில­வ­ரம் சாத­கமாக அமை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.