சிங்கப்பூர் திரையுலகில் பன்மொழிக் கலைஞர்

சிங்கப்பூர் திரையுலகில் பன்மொழிக் கலைஞர்

3 mins read
6f627971-c207-4fc1-bff7-1973ebdf7d82
சிங்கப்பூர் திரையுலகில்காலடி எடுத்து வைக்கிறார் பன்மொழிக்கலைஞரான தாஸ் என்றழைக்கப்படும் தர்மதாசா டி. தருமசேனா (வலது). இவர் நடித்த 'ரீயூனியன் டின்னர்' சிங்கப்பூர் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி இது. படம்: குளோவர் ஃபிலிம்ஸ் -

சீனப் புத்­தாண்­டுக்­கான சிறப்­புப் பட­மாக உரு­வா­கி­யுள்ள 'ரீயூ­னி­யன் டின்­னர்' என்ற சீன­மொ­ழித் திரைப்­படம் இம்மாதம் 20ஆம் தேதி திரைக்கு வந்­தது. உள்­ளூர் இயக்கு­நர் ஓங் குவோ சின்­னின் இயக்­கத்­தில் படைக்­கப்­பட்­டுள்ள இத்­திரைப்­ப­டத்­தில், 'ஏகே' என்ற நகைச்­சு­வைக் கதா­பாத்­தி­ரத்­தில் 31 வயது 'தாஸ்' எனும் தர்­ம­தாசா டி. தரு­ம­சேனா நடித்­துள்­ளார்.

சமூக ஊடகங்களின் மூலம் பிர­ப­ல­ம­டைந்­தும் வசந்­தம், 'சேனல் 8' ஒளி­வ­ழி­க­ளின் நாட­கத் தொடர்­களில் நடித்­தும், நைட் அவல் சினி­மேட்­டிக்ஸ் நிறு­வ­னத்­தில் நகைச்­சு­வைக் கலை­ஞ­ராக இருந்­தும், இளை­யர்­க­ளைப் பெரி­தும் கவர்ந்­துள்­ளார் தாஸ். குறிப்­பாக, 2020ஆம் ஆண்­டில், பிர­த­மர் திரு லீ சியன் லூங்­கின் கொவிட்-19 பொது உரையை நகை­யா­டிய 'மீம்' எனப்­படும் நகைச்­சு­வைக் காணொ­ளி­யில் இவர் பிர­த­ம­ரைப் போல் நடித்­தது, திரு லீயின் கவ­னத்­தையே ஈர்த்­தது. நான்கு மொழி­க­ளி­லும் பிர­த­ம­ரின் உரையை நகை­யாடி இணையத்தில் பிரபலமான தனது 'மேஜிக் கப்' காணொ­ளி­யைக் கண்ட பிர­த­மர், அதை ரசித்­த­தாகத் தன்­னி­டம் சமூக ஊட­கம் வாயிலாகக் கூறி­ய­தா­க­வும் தாஸ் பகிர்ந்­து­கொண்­டார்.

ஆங்­கி­லம், சீனம், மலாய், தமிழ் ஆகிய சிங்­கப்­பூ­ரின் நான்கு அதி­கா­ரத்­துவ மொழி­க­ளி­லும் சர­ள­மா­கப் பேசக்­கூ­டிய அரிய ஆற்­ற­லைக் கொண்­டுள்­ளார் தாஸ். முழுக்க முழுக்­கச் சீன மொழி­யில் எடுக்­கப்­பட்ட 'ரீயூ­னி­யன் டின்­னர்' திரைப்­ப­டத்­தில், பல்­லாண்டு அனு­ப­வம் கொண்ட சிறந்த நடி­கர்­க­ளு­ட­னும் கலை­ஞர்­க­ளு­ட­னும் நடிப்­ப­தில் சற்று பயம் இருந்­த­போ­தும், அதை போக்­கும் வண்­ணம் நல்­ல­தோர் உற்­சா­க­மான, ஒற்­று­மை­யா­ன சூழ­லில் இப்­ப­டம் உரு­வா­ன­தா­கத் தமிழ் முர­சி­டம் கூறி­னார் தாஸ். பன்­மொழி நகைச்­சு­வைக் கலை­ஞ­ராக வலம்­வரும் அவர், இந்த திரைப்­பட அனு­ப­வம் தனது மற்ற படைப்­பு­க­ளை­விட மிக வித்­தி­யா­ச­மா­க­வும் சுவா­ர­சி­ய­மா­க­வும் இருந்­த­தா­கச் சொன்­னார்.

"இப்­ப­டத்­தில் என்னை மிக­வும் கவர்ந்­தது, 'ஸ்லாப்ஸ்­டிக்' எனப்­படும் மிகைப்­ப­டுத்­தப்­பட்ட நகைச்­சுவையோ, குறிப்­பிட்ட நபர்­க­ளைப் புண்­ப­டுத்­தும் வகை­யில் உள்ள நகைச்­சு­வையோ எது­வும் இல்­லாதது­தான். நான் ஓர் இந்­தி­யர் என்ற அடிப்­ப­டை­யில் என்னை இப்­ப­டத்­திற்­காக இயக்­கு­நர் ஓங் தேர்ந்­தெடுக்­க­வில்லை. எனது கதா­பாத்­தி­ர­மான 'ஏகே'வை வலிய அவர் இக்கதை­யில் புகுத்­த­வும் இல்லை. சீன­மொழி பேசக்­கூ­டிய ஒரு நல்ல நகைச்­சு­வைக் கலை­ஞர் என்ற முறை­யில் என்­னைத் தேர்ந்­தெ­டுத்­த­தில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நகைச்­சுவை ஒரு புறம் இருக்க, சிறார் முதல் பெரி­ய­வர் வரை அனை­வ­ரும் பார்க்­க­வேண்­டிய ஒரு பட­மாக இதை நான் கருதுகிறேன். ஏனெ­னில், எல்­லோ­ருக்­கும் பொது­வா­ன குடும்­பப் பிணைப்பை இக்­கதை வலி­யு­றுத்­திச் சொல்­கிறது." என்­றார் தாஸ்.

சிங்­கப்­பூர் சீனர்­க­ளின் கலா­சா­ரம் பிற நாடு­களில் வசிக்­கும் சீனர்­களி­ட­மி­ருந்து வேறு­பட்டு இருப்­பதா­க­வும் மிக­வும் தனித்­தன்மை வாய்ந்­த­தென்றும் கூறி­ய­தோடு, இப்­படத்­தைக் காணும் பல்­லி­ன சிங்­கப்­பூ­ரர்­கள் அதைப் பற்றி மேலும் அறிந்­து­கொள்­வர் என்று தாஸ் குறிப்பிட்டார். அத்­த­கைய கலா­சா­ரம் சார்ந்த விழிப்­பு­ணர்வை ஊட்­டக்­கூ­டிய வகை­யில் 'ரீயூ­னி­யன் டின்­ன­ர்' திரைக்­கதை அமைந்­துள்­ளதை அவர் சுட்டினார்.

சிங்­கப்­பூ­ரின் திரைப்­ப­டத் துறை­யில் நகைச்­சு­வைக் கலை­ஞ­ராக நுழைந்­துள்ள ஒரு சில இந்­தி­யர்­களில் தாஸும் ஒரு­வர். இந்­தி­யர்­களையோ எந்த ஒரு சமூ­கத்­தையோ தாழ்த்­தும் வண்­ணம் இத்­தி­ரைப்­படத்­தில் எந்த வச­ன­மும் காட்­சி­யும் இல்­லா­தது தனக்கு மகிழ்ச்சி அளிப்­ப­தாக அவர் கூறி­னார்.

பல்­லின சமு­தா­ய­மான சிங்­கப்­பூ­ரில் இன்­னும் அதி­கம் விரி­வ­டை­யா­மல் இருக்­கும் திரைத்­து­றை­யைப் பற்றி கேட்­ட­போது, சிங்­கப்­பூ­ரர்­கள் வெளி­நா­டு­களில் உள்ள திரைப்­படங்­க­ளின் மீது அலாதி மோகம் கொண்­டுள்­ள­தா­க­வும், உள்­ளூர்ப் படைப்பு­களின் தரத்­தைச் சற்று சந்­தே­க­மா­கவே பார்ப்­ப­தா­க­வும் தாஸ் வருத்­தப்­பட்­டார்.

"உள்­ளூர்க் கலை­ஞர்­களை நாம்­தானே ஊக்­கு­விக்­க­வேண்­டும்? திரை­ய­ரங்­கு­க­ளுக்­குச் செல்­லும்­போது, எப்­போ­தும் காணக்­கூ­டிய திரைப்­ப­டங்­களை மட்­டும் பார்க்­கா­மல், அவ்­வப்­போது உள்­ளூர்ப் படைப்­பு­க­ளை­யும் நாம் காண­லாம். 'ரீயூ­னி­யன் டின்­னர்' மட்­டு­மின்றி, 'ஆ கல்ஸ் கோ ஆர்மி' முத­லிய இவ்­வாண்­டின் சிங்­கப்­பூர்த் திரைப்­படங்­கள் அப்­ப­டிப்­பட்ட ஒரு நல்ல வாய்ப்­பை­யும் விழிப்­பு­ணர்­வை­யும் சிங்­கப்­பூ­ரர்­க­ளி­டையே ஏற்­ப­டுத்­தும் என்று நம்­பு­கின்­றேன்." என்­றார் தாஸ்.

'ரீயூ­னி­யன் டின்­னர்', 'ரோம்-காம்' எனும் நகைச்­சுவை கலந்த காதல் கதையை மைய­மா­கக் கொண்­டுள்­ளது. குடும்­பப் பிரச்­சி­னை­களில் சிக்­கி­யுள்ள படத்­தின் கதா­நா­ய­கர், சந்­தர்ப்­பச் சூழ்­நி­லை­களால் சீனப் புத்­தாண்­டின் குடும்ப விருந்து நிகழ்­வில் தனது குடும்ப உறுப்­பி­னர்­க­ளாக நடிக்க சில நடி­கர்­களை உத­விக்கு அழைக்­கும்­பொ­ழுது நடக்­கும் நகைச்­சுவை சம்­ப­வங்­கள் திரைக்­க­தை­யின் சாராம்­ச­மாக அமைந்­துள்­ளன.

ஆ. விஷ்ணு வர்தினி