தீவு விரைவுச்சாலையின் அரிய அம்சத்தில் மாற்றம்

தீவு விரைவுச்சாலையின் அரிய அம்சத்தில் மாற்றம்

1 mins read
e5bf23a3-e0e0-43c9-92f0-6891325440d7
வலது புறத்திலிருந்து வெளியேற வகைசெய்யும் சிங்கப்பூரின் ஒரே விரைவுச்சாலை பாதை இது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் வலது புறத்­தி­லி­ருந்து வெளி­யேற வகை­செய்­யும் ஒரே விரை­வுச்­சாலை மாற்­றி­ய­மைக்­கப்­ப­ட­வுள்­ளது. தீவு விரை­வுச்­சா­லை­யி­லிருந்து கிள­மெண்டி சாலை, அப்­பர் புக்­கிட் தீமா சாலை ஆகி­ய­வற்­றுக்­குச் செல்­வ­தற்­கான இந்­தப் பாதை இவ்­வாண்டு பிற்­பா­தி­யில் மாற்­றி­யமைக்­கப்­ப­ட­வுள்­ளது.

பாது­காப்பை வலுப்­ப­டுத்த தீவு விரை­வுச்­சா­லை­யின் 26ஏ வெளி­வா­யில் அகற்­றப்­படும் என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் தெரி­வித்­தது. புதிய 26ஏ வெளி­வா­யில் தீவு விரை­வுச்­சா­லை­யின் இடது புறம் அமைக்­கப்­படும்.

புதிய வெளி­வா­யில் தாழ்­வாக அமைந்­தி­ருக்­கும். தீவு விரை­வுச்­சா­லைக்­குக் கீழ் ஒரு சுரங்­கத்­தின் வழி வாக­ன­மோட்­டி­கள் வலது புறத்­துக்­குச் செல்­வர்.

32.7 மில்­லி­யன் வெள்ளி மதிப்பு­கொண்ட இந்த திட்­டத்தை 'மெகாஸ்­டோன் ஹோல்­டிங்ஸ்' நிறு­வ­னம் ஏற்று நடத்­து­கிறது. இத்­திட்­டம் நிறை­வ­டை­யும் நிலை­யில் உள்­ளது.

இடது புறத்­தி­லி­ருந்து வெளி­யே­று­வ­தற்­கான தற்­கா­லி­கப் பாதை 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமைக்­கப்­பட்­டது. மூடப்­பட்­டி­ருந்த அந்­தப் பாதை சாலைப் பணி­கள் நிறை­வ­டைந்த பிறகு திறக்­கப்­படும்.

சாலைப் பணி­க­ளைச் சென்ற ஆண்டு முடிக்­கத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. ஆனால், கொள்­ளை­நோய்ப் பர­வல் சூழ­லால் நில­விய மனி­த­வ­ளப் பற்­றாக்­கு­றை­யால் ஏற்­பட்ட பாதிப்­பைத் தொடர்ந்து இப்­ப­கு­தி­யின் சாலைப் பணி­கள் இவ்­வாண்டு இறு­திக்­குள் நிறை­வ­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக நிலப் போக்கு­வ­ரத்து ஆணை­யம் கூறி­யது.