முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பல்கலைக்கழகங்கள்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பல்கலைக்கழகங்கள்

1 mins read
7811f195-5f38-4eb9-858a-1cd5c97f9081
-

பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளின் திட்­டத்­தின்­கீழ் வெளி­நாட்­டுப் பய­ணம் மேற்­கொள்­ளும் மாண­வர்­கள் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளாக இருக்க வேண்­டும். அது­மட்­டு­மின்றி, பெற்­றோ­ரின் அனு­ம­தியை அவர்­கள் பெற்­றி­ருக்க வேண்­டும்.

பல்­க­லைக்­க­ழ­கத்­தின் ஏற்­பாட்­டில் வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்­லும் மாண­வர்­கள், மாண­வர்­க­ளுக்­கான பய­ணக் காப்­பு­று­தித் திட்­டங்­க­ளால் பாது­காக்­கப்­ப­டு­வர் என்­றும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டால் அதற்­குத் தேவை­யான மருத்­து­வச் செல­வு­க­ளை­ அவை பார்த்­துக்­கொள்­ளும் என்­றும் உள்­ளூர் பல்­க­லைக்­க­ழ­கங்­கள் தெரி­வித்­தன.

"வெளி­நாடு செல்­லும் மாண­வர்­கள், பய­ணத் தயார்­நிலை தொடர்­பான கட்­டா­யப் பாடக்­கூறு ஒன்­றைப் பூர்த்தி செய்து அதில் தேர்ச்சி பெற வேண்­டும். வெளி­நாடு செல்­வ­தால் கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­படும் அபா­யம் இருப்­பது தங்­க­ளுக்­குத் தெரி­யும் என்று குறிப்­பி­டும் படி­வத்­தை­யும் பெற்­றோர் அல்­லது காப்பாளர்

க­ளின் ஒப்­பு­தல் கடி­தத்­தை­யும் மாண­வர்­கள் சமர்ப்­பிக்க வேண்­டும்," என்று சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தின் செய்­தித்­

தொ­டர்­பா­ளர் தெரி­வித்­தார்.

புறப்படுவதற்கு முன்பு, அவர்கள் வெளியுறவு அமைச்சிடம் இணையம் மூலம் பதிவு செய்ய வேண்டும். அவர்களது பயணத் திட்டம் குறித்த விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.