பேருந்து விபத்தில் மாண்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஏறத்தாழ $650,000 இழப்பீடு

பேருந்து விபத்தில் மாண்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஏறத்தாழ $650,000 இழப்பீடு

2 mins read
b4d3f1ef-e5c5-4ecc-a99a-e29cfda4bd3c
ஜென்டிங் மலைக்குப் போகும் வழியில் நிகழ்ந்த விபத்தில் படுகாயம் ஏற்பட்டு மரணமடைந்த திருவாட்டி செரினா மாட் இட்ரிஸ் (இடது). படங்கள்: திரு யுஸ்‌ரி மாட் இட்ரிஸ், நெகிரி செம்பிலான் தீயணைப்புப் படை -
multi-img1 of 2

சாலை விபத்­தில் மாண்ட பெண்­ணின் குடும்­பத்­துக்கு ஏறத்­தாழ $650,000 இழப்­பீட்­டுத் தொகையை வழங்க உயர் நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

2018ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் 7ஆம் தேதி­யன்று சுற்­று­லாப் பேருந்து ஒன்று மலே­சி­யா­வில் விபத்­துக்­குள்­ளா­னது.

சிங்­கப்­பூ­ர­ரான செரினா மாட் இட்­ரிஸ் பய­ணம் செய்­து­கொண்­டி­ருந்த பேருந்து, நெகிரி செம்­பி­லான் மாநி­லத்­தில் லாரி மீது மோதி­யது. மோதிய வேகத்­தில் அவர் பேருந்­தி­லி­ருந்து வெளியே தூக்கி எறி­யப்­பட்­டார். அப்­போது

அவ­ருக்கு 27 வயது.

தமது திரு­மண நாளைக் கொண்­டாட கண­வர், ஆண் குழந்தை, மற்ற குடும்ப உறுப்

­பி­னர்­க­ளு­டன் திரு­வாட்டி செரினா ஜென்­டிங் மலைக்­குச் சென்­று­கொண்­டி­ருந்­த­போது விபத்து நிகழ்ந்­தது.

விபத்து நிகழ்ந்­த­போது அந்த ஈர­டுக்­குப் பேருந்­தின் மேல் மாடி­யின் முதல் வரிசை இருக்­கை­யில் திரு­வாட்டி செரினா அமர்ந்­தி­ருந்­தார். விபத்­தில் படு­கா­யம் அடைந்த அவர் மர­ணம் அடைந்­தார்.

இரண்டு ஆண்­டு­கள் கழித்து, இழப்­பீடு கோரி திரு­வாட்டி செரி­னா­வின் கண­வர் அக­மது சுமிட்ஜா மசி­ரான், டிரான்ஸ்­டார் டிரா­வல் நிறு­வ­னத்­தின் உரி­மை­யா­ளர், பேருந்து ஓட்­டு­நர் ஆகி­யோ­ருக்கு எதி­ராக வழக்கு தொடுத்­தார்.

2020ஆம் ஆண்டு டிசம்­பர் மாதத்­தில் வழக்­கின் பிர­தி­வா­தி­கள் திரு­வாட்டி செரி­னா­வின் மர­ணத்­துக்­குப் பொறுப்­பேற்­றுக்­கொண்­ட­னர். இழப்­பீட்­டுத் தொகையை நிர்­ண­யிக்­கும் வழக்­கு­கள் கடந்த ஆண்டு நீதி­பதி கண்­ணன் ரமேஷ் முன்­னி­லை­யில் நடை­பெற்­றன.

திரு­வாட்டி செரி­னா­வின் மர­ணத்­தால் அவர் மூலம் அவ­ரது குடும்­பத்­துக்­குக் கிடைத்திருக்கக்

கூ­டிய வரு­மா­னம் இல்­லா­மல் போய்­விட்­டதை திரு சுமிட்­ஜா­வின் வழக்­க­றி­ஞர்­கள் நீதி­மன்­றத்­தில் தெரி­வித்­த­னர். திரு­வாட்டி செரினா உயி­ரு­டன் இருந்­தி­ருந்­தால் சம்­பா­தித்­தி­ருக்­கக்­கூ­டிய பணம், அவ­ரது மத்­திய சேம­நி­திக் கணக்­கில் சேர்ந்­தி­ருக்­கக்­கூ­டிய தொகை ஆகி­ய­வற்றை இழப்­பீ­டா­கக் கொடுக்க வேண்­டும் என்று திரு சுமிட்­ஜா­வின் வழக்­க­றி­ஞர்­கள் கோரிக்கை விடுத்­த­னர்.

திரு­வாட்டி செரினா மாண்­ட­போது அவர் ஸ்பார்க்­கல்­டோட்ஸ் பாலர் பள்­ளி­யில் குழந்­தைப்

பரா­ம­ரிப்­பா­ள­ரா­கப் பணி­பு­ரிந்­தார்.

அவர் உயி­ரு­டன் இருந்­தி­ருந்­தால் இவ்­வாண்டு அவ­ருக்குப் பதவி உயர்­வு­டன் சம்­பள உயர்­வும் கிடைத்­தி­ருக்­கும். இழப்­பீட்­டுத் தொகையை நிர்­ணயிக்­கும்­போது இவை கருத்­தில்கொள்­ளப்­பட்­டன.

அத்­து­டன், அவர் ஓய்­வு­பெ­றும் வயது 62ஆக இருந்­தி­ருக்­கும் என்­பதை நீதி­பதி ஏற்­றுக்­கொண்­டார்.

வரித் தொகை கழிக்­கப்­பட்டு, அவ­ரது ஆண்டு வரு­மா­னத்தை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு திரு­வாட்டி செரி­னா­வின் குடும்­பத்­துக்கு $522,228 இழப்­பீட்­டுத் தொகை வழங்க வேண்­டும் என நீதி­பதி உத்­த­ர­விட்­டார்.

திரு­வாட்டி செரினாவின் மத்­திய சேம­நி­திக் கணக்­கிற்கு $103,953 இழப்­பீட்­டுத் தொகை வழங்­க­வேண்­டும் என்­றும் உத்­த­ர­வி­டப்­பட்­டது. இந்த வழக்கு தொடர்­பாக திரு­வாட்டி செரி­னா­வின் குடும்­பத்­துக்கு ஏற்­பட்ட இதர செலவுக­ளுக்­காக ஏறத்­தாழ $24,000 வழங்க வேண்­டும் என்று நீதி­பதி உத்­த­ர­விட்­டார்.