பழைய கார்களை மாற்ற தனது தனியார் வாடகை கார் ஓட்டு
நர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை கிராப் நிறுவனம் நீட்டித்துள்ளது. 12 ஆண்டுகள், அதற்கும் அதிகமான பழைய கார்களுக்குப் பதிலாக வரும் மே மாதம் 1ஆம் தேதிக்குள் வேறு கார்களுக்கு ஓட்டுநர்கள் மாற வேண்டும். இதற்கு முன்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி வரை ஓட்டுநர்களுக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக தொடரும் சவால்
களைக் கருத்தில்கொண்டு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கிராப் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
பத்து ஆண்டுகளுக்குக் குறைவான கார்களுக்கு மாற கிராப் ஓட்டுநர்களுக்குக் கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது. இவ்வாண்டு ஜூலை மாதத்துக்குள் கிராப் கார்கள் அனைத்தும் 10 ஆண்டுகளுக்குக் குறைவான கார்களாக இருக்க வேண்டும்.
கிராப் ஓட்டுநர்களாகப் புதிதாகப் பதிவு செய்துகொள்வோர் பத்து ஆண்டுகளுக்குக் குறைவான கார்களை மட்டுமே பயன்
படுத்த முடியும். கால அவகாசம் கடந்தும் தொடர்ந்து பழைய கார் ஓட்டுபவர்களின் கிராப் ஓட்டுநர் கணக்குகள் தற்காலிகமாக முடக்கி வைக்கப்படும். அவ்வாறு நேர்ந்தால் அவர்களால் கிராப் சேவையை வழங்க முடியாது.

