கொவிட்-19 தடுப்பூசி தொடர்பாக சுகாதார அமைச்சிடம் போலித் தகவல் சமர்ப்பித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் மருத்து வரான 35 வயது ஜிப்சன் குவா $20,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது உதவியாளரான 40 வயது தாமஸ் சுவா செங் சூனும் அதே குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார். அவர் $15,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மெஹ்ராஜுன்னிஷா என்பவர் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாதபோதிலும் அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர் என அமைச்சிடம் குவா தெரிவித்த
தாகக் கூறப்படுகிறது.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான சான்றிதழை மெஹ்ராஜுன்னிஷா பெற இவ்வாறு செய்யப்பட்டதாக அறியப்படுகிறது.
கொவிட்-19 தடுப்பூசிக்கு எதிராகக் கருத்துகளைத் தெரிவித்த 'ஹீலிங் தி டிவைட்' அமைப்பின் நிறுவனரான 46 வயது ஐரிஸ் கோ சூ சீ மீதும் மோசடிக்
குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

