உட்லண்ட்ஸ் வீவக வீட்டில் தீ; 50 பேர் வெளியேற்றப்பட்டனர்

உட்லண்ட்ஸ் வீவக வீட்டில் தீ; 50 பேர் வெளியேற்றப்பட்டனர்

1 mins read
59957010-6175-4244-be58-8e17cd6076c7
உட்லண்ட்ஸ் டிரைவ் 75ல் உள்ள வீவக புளோக் 688எஃப்-ன் 14ஆம் மாடியில் உள்ள விட்டில் தீ மூண்டது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை / ஃபேஸ்புக் -

உட்­லண்ட்­ஸில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடு ஒன்­றில் தீ மூண்­ட­தால் சுமார் 50 குடி­யி­ருப்­பா­ளர்­கள் வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­னர். நேற்று மதி­யம் 1.25 மணி­ய­ள­வில் இச்­சம்­ப­வம் குறித்­து தங்­க­ளுக்­குத் தக­வல் வந்­த­தாக சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தனது ஃபேஸ்புக் பதி­வில் தெரி­வித்­தது.

உட்­லண்ட்ஸ் டிரைவ் 75ல் உள்ள வீவக புளோக் 688எஃப்-ல் இச்­சம்­ப­வம் நிகழ்ந்­தது. தீய­ணைப்­பா­ளர்­கள் சென்­ற­போது 14ஆம் மாடி­யில் உள்ள வீட்­டின் படுக்கை அறை­யில் தீ மோச­மாக எரிந்­து­கொண்­டி­ருந்­த­தாகக் குடி­மைத் தற்­காப்­புப் படை கூறி­யது. யாரும் காயமடையவில்லை. தீக்கான கார­ணத்தை அறிய விசா­ரணை மேற்­கொள்ளப்பட்டு வருகிறது.