இரவு நேரத்தில் நடந்த பயங்கரவாத எதிர்ப்பு பாவனை பயிற்சி

1 mins read
ea2db8c3-b5a9-44bc-a898-ae54dc6d6ac2
பயங்கரவாத எதிர்ப்பு பாவனைப் பயிற்சியில் தாழ்வாகப் பறக்கும் ஹெலிகாப்டர்.படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை, 'த ஸ்டார் விஸ்டா கடைத் தொகுதி­யில் இரவு நேர பயங்­க­ர­வாத எதிர்ப்பு பாவ­னைப் பயிற்­சியை நடத்­தி­யுள்­ளது.

போன விஸ்டா வட்­டா­ரத்­தில் உள்ள அந்­தக் கடைத் தொகு­தி­யில், திங்­கட்­கி­ழமை இரவு முதல் செவ்­வாய்க்கிழமை அதி­காலை வரை அந்­தச் சிறப்­புப் பயிற்சி இடம்­பெற்­றது. சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யின் சிறப்­புச் செய­லாக்­கப் பணிக் குழு­வின் தலை­மை­யில் மேற்­கொள்ளப்பட்ட பயிற்­சி­யில், சிங்­கப்­பூர் ஆகாயப்படை­யின் H225M (ஹெச்225எம்) ரக ஹெலி­காப்­டர்­களும் ஈடு­ப­டுத்­தப்­பட்­டன.

'ஏர்­பஸ்' நிறு­வ­னத் தயா­ரிப்­பு ­க­ளான அந்த ஹெலி­காப்­டர்­கள் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யின் பல்­வேறு நட­வ­டிக்­கை­க­ளுக்­குப் பயன் ­ப­டுத்­தப்­ப­டு­பவை.

மருத்­து­வத் தேவைக்­காக வெளி­யேற்­று­தல், தேடல்-மீட்­புப் பணி­கள், மனி­த­நேய உதவி, பேரிடர் நிவா­ர­ணம், கடல்­து­றைப் பாது­காப்பு நட­வ­டிக்­கை­கள் ஆகி­ய­வை­யும் அவற்­றுள் அடங்­கும்.

'த ஸ்டார் விஸ்டா' கடைத் தொகு­தி­யில் இடம்­பெற்ற பாவ­னைப் பயிற்­சி­யில் நகர்ப்­பு­றச் சூழ­லில் பிணைப் பிடிப்­பைக் கையாண்டு, விரைந்து மிரட்­டல்­க­ளைக் கட்­டுக்­குள் கொண்­டு­வ­ரு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

ஆயுதப் படையின் தயார்­நி­லை­யைச் சோதிப்­ப­தும், பல்­வேறு அச்­சு­றுத்­தல்­க­ளைக் கையா­ளும் திறனை வலுப்­ப­டுத்­து­வ­தும் அந்­தப் பயிற்­சி­யின் இலக்­கு­கள். கொவிட்-19 பர­வி­வ­ரும் சூழ­லி­லும், சிங்­கப்­பூர் ஆயு­தப் படை அதன் பயிற்­சி­க­ளைத் தொடர்­வ­தா­கத் தற்­காப்பு அமைச்­சின் பேச்­சா­ளர் தெரி­வித்­தார். சிங்­கப்­பூ­ரின் இறை யாண்மை, பாது­காப்பு ஆகி­ய­வற்­றைக் கட்­டிக்­காப்­ப­தற்கு ஏற்ற தயார்­நி­லை­யில் எப்­போ­தும் இருப்­பதை உறு­தி­செய்­வது அதன் நோக்­கம் என்­றார் அவர்.