எஸ்எம்ஆர்டி ரயில் நிறுவனத்தின் மீது, 2018ஆம் ஆண்டு ஊழியரின் பாதத்தில் ரயில் ஏறிய சம்பவம் தொடர்பில், நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சாட்டப்பட்டது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஊழியரின் காலைப் பிறகு அகற்ற நேரிட்டது குறிப்பிடத்தக்கது.
வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரச் சட்டத்தின்கீழ், பணியிடத்தில் ஊழியரின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை உறுதிசெய்யத்
தவறியதாக மாவட்ட நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
எஸ்எம்ஆர்டி நிறுவனம் 2018ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதியிலோ அதற்கு முன்போ, அபாய மதிப்பீடு செய்யத் தவறியதாகவும் பாதுகாப்பான வேலை நடைமுறையை வரையறுக்கவில்லை என்றும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிசார்ந்த தொடர்பு சாதனங்கள் போதிய அளவில் வழங்கப்படவில்லை என்றும் குறைகூறப்பட்டது.
அந்தச் சம்பவம் ஜூ கூன் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே சேவை நேரத்திற்கு முன்பாக நடந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.
ஆறு பேர் கொண்ட குழு, பரா
மரிப்புப் பணியின்போது ரயிலை நிறுத்துவதற்கான கருவியைச் சோதித்துக் கொண்டிருந்தது.
அவ்வேளையில், அந்த ரயிலில் இருந்து ரயில் பாதையில் எண்ணெய்க் கசிவு ஏதும் ஏற்பட்டதா என்று ஊழியர் ஒருவர் சோதித்துக் கொண்டிருந்தார்.
அந்த ஊழியர் ரயில் பாதையில் விழுந்து கிடப்பதைப் பார்த்தவுடன் சோதனை நிறுத்தப்பட்டதாக நிறு
வனம் கூறியது.
குடிமைத் தற்காப்புப் படையின் உதவி கோரப்பட்டு, பாதிக்கப்பட்ட ஊழியர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருடைய வலது காலின் கீழ்ப் பகுதி அகற்றப்
பட்டது.
பாதிக்கப்பட்டவர் அனுபவமிக்க 59 வயது ஊழியர் என்று ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் தகவல் வெளி
யிட்டிருந்தது.
சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதுடன், பராமரிப்புப் பணிகளுக்குத் தற்காலிகத் தடையும் விதிக்கப்பட்டது. எஸ்எம்ஆர்டி ரயில் நிறுவனத்தின் மீதான விசாரணை மார்ச் 8ஆம் தேதி தொடரும்.
வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், எஸ்எம்ஆர்டி ரயில் நிறு
வனத்திற்கு $500,000 வரை
அபராதம் விதிக்கப்படலாம்.

