$16 மி. டோட்டோ சாதனை பரிசு

$16 மி. டோட்டோ சாதனை பரிசு

1 mins read
0517a659-71bf-4fa5-9408-3d12d6626693
புளோக் 103 ஈசூன் அவென்யூ 5ல் அமைந்துள்ள சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவன கிளையில் டோட்டோ வாங்க வரிசையில் மக்கள். (படம்: சின் மின் நாளிதழ்) -

இவ்வாண்டு டோட்டோ ஹங்பாவ் அதிர்ஷ்டக் குலுக்கில் பரிசுத் தொகை $16 மில்லியன்.

டோட்டோ வரலாற்றில் இதுவே ஆகப் பெரிய தொகை எனக் கூறப்பட்டது.

2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு, இவ்வாண்டுக்கான பரிசுத் தொகையே ஆக அதிகம் என சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

சென்ற ஆண்டு பரிசுத் தொகை $8 மில்லியன். சென்ற வியாழக்கிழமை நடைபெற்ற டோட்டோ குலுக்கலில் $1.5 மில்லியன் பரிசுத் தொகை யாருக்கும் கிடைக்கவில்லை.

அதனையடுத்து திங்கட்கிழமை நடந்த $4 மில்லியன குலுக்கிலும் வெற்றியாளர் இல்லை.

அதனால் இந்தத் தொகை எதிர்வரும் குலுக்கலில் சேர்க்கப்பட்டு $16 மில்லியனாக அறிவிக்கப்பட்டது.

சீனப் புத்தாண்டையொட்டிய மாபெரும் டோட்டோ குலுக்கு வெள்ளிக்கிழமை ( 11 பிப்ரவரி) இரவு 9.30 மணிக்கு நடைபெறும்.