சிங்கப்பூரில் அன்றாட கொவிட்-19 தொற்று எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 8) நிலவரப்படி 12,791ஆக இருந்தது.
ஒப்புநோக்க திங்கட்கிழமை நிலவரப்படி 7,629 பேருக்குத் தொற்று உறுதியானது.
தொற்றுப் பாதிப்பால் மேலும் 29 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம் 1,194 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.
திங்கட்கிழமையன்று இந்த எண்ணிக்கை 1,165.
மருத்துவமனைகளில் கொவிட்-19 பாதிப்புக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை நான்கவது நாளாக ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. நேற்று பதிவான தொற்றுப் பாதிப்பில் 10,038 பேருக்கு ஆன்டிஜன் விரைவு பரிசோதனை (ஏஆர்டி) மூலம் தொற்று கண்டறியப்பட்டது.
எஞ்சிய 2,753 பேருக்கு பல்படியத் தொடர்வினை பரிசோதனை (பிசிஆர்) மூலம் தொற்று கண்டறியப்பட்டது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் 23 பேர் உள்ளனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் 107 பேருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
கொவிட்-19க்கு மேலும் மூவர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 220 பேருக்குத் தொற்று உறுதியானது.
வாராந்திர தொற்று விகிதம் செவ்வாய்கிழமை 1.69ஆக இருந்தது. திங்கட்கிழமை அது 1.52ஆக இருந்தது
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி சிங்கப்பூரில் மொத்தம் 418,640 தொற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 877 பேர் தொற்றுப் பாதிப்பால் மாண்டனர்.

