'ஏஆர்டி' கருவிகளின் தேவை அதிகரிப்பு

'ஏஆர்டி' கருவிகளின் தேவை அதிகரிப்பு

2 mins read
1b67c157-2fde-4387-8df1-7822f8c67a8b
ஏஆர்டி கருவிகள் விற்று முடிந்ததாக 'ஜங்ஷன் எய்ட்' கடைத்தொகுதியின் 'யூனிட்டி' மருந்தாளர் கடையில் அறிவிப்பு ஒன்று வைக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

ஆன்­டி­ஜன் விரை­வுப் பரி­சோ­தனை (ஏஆர்டி) கரு­வி­க­ளுக்­கான தேவை, கடந்த சில வாரங்­க­ளாக அதி­கரித்து வரு­கிறது. குறிப்­பாக, சீனப் புத்­தாண்டு விழாக்­கா­லத்­தில் காணப்­பட்டு வரும் இத்­தேவை அதி­க­ரிப்­புக்கு ஏற்ப, தாங்­கள் மேலும் இருப்­பு­க­ளைக் கொண்டு வந்த வண்­ணம் உள்­ள­தாக சில்­லறை வர்த்­த­கங்­கள் கூறு­கின்­றன.

விழாக்­கா­லத்­தா­லும் வேலை­ இடங்­க­ளுக்­குக் கூடு­த­லா­னோர் திரும்­பு­வ­தா­லும் 'கார்­டி­யன்' போன்ற மருந்­தா­ளர் கடை­களில் ஜன­வரி மாத இடை­யி­லி­ருந்து ஏஆர்டி கருவி­க­ளுக்­கான தேவை இரு மடங்­கா­கி­யுள்­ள­தா­கக் கூறப்­பட்­டது.

கடந்த ஆண்டு நவம்­பர், டிசம்­பர் மாதங்­களில் காணப்­பட்­ட­தைக் காட்­டி­லும் ஜன­வ­ரி­யில் பரி­சோ­த­னைக் கரு­வி­க­ளுக்­கான தேவை­யில் குறிப்­பி­டத்­தக்க அதி­க­ரிப்பு காணப்­ப­டு­வ­தாக 'டிஎ­ஃப்ஐ' சில்­லறை வர்த்­த­கக் குழுமப் பேச்­சா­ளர் கூறி­னார். 'கார்­டி­யன்', 'கோல்டு ஸ்டோ­ரேஜ்', 'ஜயன்ட்' போன்ற நிறு­வ­னங்­களை உள்­ள­டக்­கி­யது இக்­கு­ழு­மம்.

"சந்­தி­ரப் புத்­தாண்­டுக்­காக பிறர் வீட்­டுக்­குச் செல்­வோர், சுய­ப­ரி­சோதனை செய்­து­கொண்டு முன்­னெச்­ச­ரிக்­கை­யாக இருக்க விரும்­பி­ய­தா­லும் கடந்த வாரத்­தில் ஏஆர்டி கரு­வி­க­ளுக்­கான தேவை அதி­கரித்­தது," என்­றார் பேச்­சா­ளர்.

'கார்­டி­யன்' இணைய வர்த்­த­கத் தளத்­தில் ஐந்து ஏஆர்டி கரு­வி­களைக் கொண்ட பெட்­டி­களும் 25 கரு­வி­க­ளைக் கொண்ட பெட்­டி­களும் விற்­றுத் தீர்ந்­து­விட்­ட­தைக் காண முடிந்­தது. ஆனால் ஒற்­றை­யா­க­வும் இரண்­டா­க­வும் விற்­கப்­படும் ஏஆர்டி கரு­வி­கள் இன்­னும் இருப்­பில் உள்­ளன.

கடந்த இரண்டு நாள்­க­ளாக ஏஆர்டி கரு­வி­க­ளுக்­கான தேவை அதி­க­ரித்­துள்­ள­தாக 'வாட்­சன்ஸ்' நிறு­வ­னம் தெரி­வித்­தது. இந்த அதி­க­ரிப்பு அதன் கடை­க­ளி­லும் அதன் இணைய வர்த்­த­கத் தளத்­தி­லும் காணப்­பட்­டது.

கடை­களில் அடுக்கி வைக்­கப்­பட்ட உடனே மக்­கள் அவற்றை வாங்­கி­வி­டு­கி­றார்­கள் என்று பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

இரண்டு மற்­றும் அதற்கு மேற்­பட்ட எண்­ணிக்­கை­யில் பரி­சோ­த­னைக் கரு­வி­களைக் கொண்ட பெட்­டி­கள் தீர்ந்து­விட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

தனது பேரங்­கா­டி­க­ளி­லும் 'யூனிட்டி' மருந்­தா­ளர் கடை­க­ளி­லும் கடந்த ஒரு வார­மாக 'ஏஆர்டி கருவி­க­ளுக்­கான தேவை அதி­கம் என்று 'ஃபேர்பி­ரைஸ்' நிறு­வ­ன­மும் தெரி­வித்­தது.

"கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை பெரு­ம­ள­வில் அதி­க­ரித்­துள்­ள­தா­லும் அடிக்­கடி பரி­சோ­தனை செய்­து­கொள்­வது குறித்து மக்­க­ளி­டையே விழிப்­பு­ணர்வு ஏற்­பட்­டுள்­ள­தா­லும் இந்த அதி­க­ரிப்பு காணப்­ப­ட­லாம்," என்று ஃபேர்பி­ரைஸ் பேச்­சா­ளர் கூறி­னார்.

இதற்­கி­டையே, தற்­போ­தைக்­குப் போது­மான ஏஆர்டி கரு­வி­கள் இருப்பில் உள்­ள­தென மூன்று நிறு­வனங்­களும் வாடிக்­கை­யா­ளர்­களுக்கு உறுதி அளித்­துள்­ளன.

கடந்த சில நாள்­க­ளாக 10,000க்கும் மேற்பட்ட கொவிட்-19 சம்­ப­வங்­கள் பதி­வாகி வரு­கின்­றன.