தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஒருவர், தனது 'டிரேஸ்டுகெதர்' செயலி மற்றும் தடுப்பூசித் தகுதிநிலையைப் பயன்படுத்திக்கொள்ள அனுமதித்த குற்றத்தை நேற்று மலேசியாவைச் சேர்ந்த 37 வயது கிரண் சிங் ரக்பிர் சிங், ஒப்புக்கொண்டார்.
செந்தோசாவில் உள்ள 'பிக்கினி பார்' மதுபானக் கூடத்தினுள் நுழைவதற்குத் தடுப்பூசி போட்டிராத சிங்கின் நண்பர் 65 வயது உதயகுமார் நல்லதம்பிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
அதையடுத்து, அருகில் இருந்த 'கோஸ்ட்ஸ்' மதுபானக் கூடத்திற்குள் நுழைய, தனது 'டிரேஸ்டுகெதர்' செயலியைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு சிங் யோசனை கூறினார்.
அவ்வாறே வேறு மதுபானக் கூடத்திற்கு உதயகுமாரும் சிங்கின் காதலியும் சென்றனர்.
இருவரும் அங்கு மது அருந்திகொண்டிருந்தபோது முன்னர் அனுமதி மறுத்த 'பிக்கினி பார்'
மதுபானக் கூட ஊழியர், அவர்களை அடையாளம் கண்டார். பின்னர், காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிங் மீது ஆள்மாறாட்டக் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இம்மாதம் 25ஆம் தேதியன்று சிங்கிற்குத் தண்டனை விதிக்கப்படும்.
உதயகுமார் மீதான வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளது.

