'சிஓஇ' கட்டணங்கள் அதிகரிப்பு

'சிஓஇ' கட்டணங்கள் அதிகரிப்பு

1 mins read
98d0528a-6617-42b4-8f9c-2fd4284206fa
-

வாகன உரி­மைச் சான்­றி­தழ் (சிஓஇ) கட்­ட­ணங்­கள் நேற்­றைய ஏலத்­தில் எல்லா வகை வாக­னங்­க­ளுக்­கும் அதி­க­ரித்­தது.

இவற்­றில் பெரிய கார்­க­ளுக்­கான கட்­ட­ணம் ஆக அதி­க­மாக, 5 விழுக்­காடு அதி­க­ரித்து $86,102 ஆனது. 1,600சிசிக்கு வரை­யி­லான சிறிய கார்­க­ளுக்­கான கட்­ட­ணம் 4.9% அதி­க­ரித்து $60,761 என முடி­வ­டைந்­தது.

பொதுப் பிரி­வுக்­கான கட்­ட­ணம் 3.7% அதி­க­ரித்து $87,000 ஆனது. மோட்­டார்­சைக்­கிளுக்­கான கட்­ட­ணம் சிறிது அதி­க­ரித்து $10,010 ஆனது. வர்த்­தக வாக­னங்­க­ளுக்­கான கட்­ட­ணம் 2.3% அதி­க­ரித்து $44,001 ஆனது.