லஞ்சம் வாங்கியவருக்கு சிறை, அபராதம்

லஞ்சம் வாங்கியவருக்கு சிறை, அபராதம்

1 mins read
c5a808e8-ed48-495e-8580-8b092b87d866
-

கட்­டு­மான வேலை­க­ளின் தாமதத்தை தவிர்க்க ஒப்­பந்­தக்­கா­ர­ருக்கு உத­வும் வகை­யில் லஞ்­சம் பெற்­ற­தற்­காக பொறி­யா­ள­ருக்கு 22 வார சிறைத் தண்­ட­னை­யும் $4,500 அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டது.

சிங்­கப்­பூ­ர­ரான 60 வயது சுவா காய் குவாட், 2017ஆம் ஆண்டு மார்ச், ஜூலை மாதங்­களில் இரண்டு முறை மொத்­தம் $4,500 லஞ்­சம் பெற்­ற­தாக லஞ்ச ஊழல் புல­னாய்­வுப் பிரிவு தெரி­வித்­தது.

அச்சமயத்தில் சிபிஜி கன்­சல்­டன்ட் நிறு­வ­னத்­தில் பொறி­யா­ள­ராக இருந்­த சுவா காய் குவாட், தாமன் ஜூரோங்­கில் ஒரு முதி­யோர் இல்ல கட்­டு­மானத் தளத்­தில் இணைக்­கப்­பட்­டி­ருந்­தார் எனக் கூறப்பட்டது.