பேருந்து விபத்து; ஓட்டுநர் மீது கவனக்குறைவு குற்றச்சாட்டு

புக்கிட் பாத்தோக்கில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் அதன் ஓட்டுநர் மீது கவனக்குறைவு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் 14 பேர் காயம் அடைந்தனர். கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி 5 மணியளவில் பேருந்து மோதி பக்கவாட்டில் சாய்ந்து விழுந்தது. சிங்கப்பூர் நாளேடுகளில் இந்த விபத்து தலைப்புச் செய்தியாக வெளியானது.

இந்­தப் பேருந்தை ஓட்­டி­ய­வர் சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வா­சி­யான 66 வயது லூ எங் சாய். அவர் மீது நேற்று முறைப்­படி நீதி­மன்­றத்­தில் குற்­றச்­சாட்டு கொண்டு வரப்­பட்­டது. கவ­னக்­கு­றை­வாக ஓட்டி அறு­வ­ருக்கு காயம் ஏற்­ப­டுத்­தி­ய­தாக அவர் மீது குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது. காயம் அடைந்­த­வர்­களில் மற்­றொரு பேருந்து ஓட்­டு­ந­ரான முஹ­மட் சாலே மியான், 65, பாத­சா­ரி­யான 57 வயது மோக்­சன் ஆகி­யோ­ரும் அடங்­கு­வர்.

இதர நான்கு பேரும் 32 முதல் 68 வயது வரை­யி­லான பய­ணி­கள். திரு சாலே­யின் பேருந்­தில் பய­ணம் ெசய்­த­வர்­கள்.

மேலும் எட்­டுப் பேருக்கு காயம் விளை­வித்­த­தா­க­வும் நேற்று திரு லூ மீது குற்­றம்­சாட்­டப்­பட்­டது.

பத்து முதல் 70 வரை­யி­லான இவர்­கள் அனை­வ­ரும் திரு சாலே­யின் பேருந்­தில் பய­ணம் செய்­த­வர்­கள். காயம் அடைந்த 14 பேரின் விவ­ரங்­கள் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!