சாங்கி சரக்குக் கிடங்குகளில் கடந்த இரு வாரங்களாக தேங்கிக் கிடந்த சரக்குகளின் நிலவரம் சீரடைந்து வருகிறது. இறக்குமதி நடவடிக்கைகள் வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளன என்று சாங்கி விமான நிலைய களப்பணிகளை கையாளும் விமானச் சரக்கு நிறுவனமான சேட்ஸ் நேற்று தெரிவித்தது.
இதுவரை தேங்கிய சில சரக்கு களின் தொடர்பில் எஞ்சிய வேலைகள் முடிக்கப்பட்டு வருவதாகவும் தற்போது சரக்குகள் வழக்கமான முறையில் கையாளப்பட்டு வரு வதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுக்கு வெளியிட்ட அறிக்கையில் சேட்ஸ் குறிப்பிட்டது.
சரக்குகளை எப்போது பெற்றுக் கொள்ள முடியும் என்பதை தெரிவிக்க சில நாட்கள் ஆகலாம். அதற்கான ஏற்பாடுகள் விரைவு படுத்தப்படுகின்றன என்றது சேட்ஸ். ஊழியர்களில் சிலர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டதால் மனிதவளப் பற்றாக்குறையை சேட்ஸ் எதிர்நோக்கியது. சீனப் புத்தாண்டையொட்டி கூடுதலாக சரக்குகள் வந்ததால் சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில் இந்த நெருக்கடி குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளேடு செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இதர பிரிவுகளிலிருந்து 40க்கும் மேற்பட்ட ஊழியர்களை 'சேட்ஸ்' சரக்குப் பிரிவுக்கு மாற்றி யது. வார விடுமுறையில் சென்றவர்கள் திருப்பி அழைக்கப்பட்டனர். தேங்கிக் கிடக்கும் சரக்குகள் விரைவில் சீர் செய்யப்படும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை சேட்ஸ் உறுதி அளித்திருந்தது. இதற்கிைடயே தங்களுடைய பொருட்களைப் பெற முடியாத சிலர் இழப்பீடு கோரப் போவதாகக் கூறியிருந்தனர். இதற்குப்பதிலளித்த 'சேட்ஸ்', காப்புறுதி நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி கோரிக்கைகள் மதிப்பீடு செய்யப்படும் என்று கூறியுள்ளது.

