காவல்துறை வீசிய வலையில் சிக்கிய 34 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
சட்டவிரோத கும்பல்களில் உறுப்பினராக இருந்தது உட்பட பல்வேறு குற்றச்செயல்களில் அவர்கள் ஈடு பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
பிடோக் காவல் நிலைய தலைமையின்கீழ் பல அரசாங்க அமைப்பு களின் அதிகாரிகள் தீவு முழு வதும் ஜனவரி 17 முதல் 21 வரை சோதனைகளை நடத்தினர்.
குற்றப் புலனாய்வுத் துறை, மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, சுகாதார அறிவியல் ஆணையம், குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம், சிங்கப்பூர் சுங்கத் துறை, நிலப் போக்குவரத்து ஆணையம், சிங்கப்பூர் உணவு அமைப்பு உள்ளிட்ட அைமப்புகள் இதில் பங்ேகற்றன.
கேலாங்கில் நடந்த சோதனையில் 27 முதல் 34 வரை மூன்று பேர், சட்டவிரோதக் கும்பல்களுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இரண்டு பேர் இருமல் மருந்து உள்ளிட்ட பதிவு செய்யப்படாத மருந்துகள் மற்றும் பாலியல் உணர்வுகளைத் தூண்டும் பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ஏறக்குறைய 9,000 வெள்ளி மதிப்புள்ள மின் சிகரெட்டுகளும் அதன் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
மற்றொரு சோதனையில் உபி அவென்யூ 3ல் உள்ள ஒரு கடையில் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட ஆறு பேர் கைதாகினர். அவர்கள் 42 வயது முதல் 62 வரையிலானவர்கள். அவர்களிடமிருந்து சூதாட்டத்துக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் $950 ரொக்கமும் கைப்பற்றப் பட்டன.
கேலாங் லோேராங் 22ல் உள்ள ஒரு ஓட்டலையும் கேலாங் ரோட்டில் உள்ள உடற்பிடிப்பு நிலையத்தையும் காவல்துறையினர் சோதனையிட்டனர். இதில் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நம்பப்படும் 32 முதல் 48 வயது வரையிலான பத்து பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சோதனையில் கேலாங் ரோட்டில் உரிமம் இல்லாமல் கரவாக்கோ பாணியில் செயல்பட்ட 'கேடிவி' நிலையம் ஒன்றை போலி சார் கண்டுபிடித்தனர்.
அங்கு மதுபானம் அருந்தி, பாட்டுப் பாடிக் கொண்டிருந்த 25 முதல் 47 வயது வரை ஐந்து ஆண்களும் நான்கு பெண்களும் சிக்கினர்.
இவர்களில் 65 வயது நபர், நிலையத்தை நடத்தியதாக நம்பப்படுகிறது.
பொதுப் பொழுதுபோக்குச் சட்டம், மதுபானக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்கீழ் இவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
வேறு ஒரு சோதனையில் சுங்கத்துறை அதிகாரிகள் சுங்கவரி கட்டாத 30 சிகரெட் பெட்டிகளைப் பறிமுதல் செய்தனர்.
இதன் தொடர்பில் 78 வயது நபர் ஒருவர் விசாரணையின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளார். இதர இரண்டு பேருக்கு சுங்கவரி செலுத்தாத சிகரெட்டுகளை வைத்திருந்ததற்காக 2,500 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கேலாங் லோரோங்குகளை பாதுகாப்பாக வைத் திருப்பதற்கு இத்தகைய அமலாக்க நடவடிக்கைகள் அவசியமாகிறது என்று கேலாங் அக்கம்பக்க காவல் துறை நிலையத்தின் துணை சூப்ரின்டென்டண்ட் லீ டிங் வெய் கூறியுள்ளார்.
கேலாங் லோரோங்குகளில் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டு பிடித்து அவற்றைத் தடுப்பதற்காக சமூகத்துடன் காவல்துறை தொடர்ந்து அணுக்கமாகச் செயல் படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

