கொவிட் 19: 10,175 தொற்றுச் சம்பவங்கள், 1,205 பேர் மருத்துவமனையில்

கொவிட் 19: 10,175 தொற்றுச் சம்பவங்கள், 1,205 பேர் மருத்துவமனையில்

1 mins read
52b4c240-f016-40b2-be4a-c9d03f2b17af
சிங்கப்பூரில் இதுவரை மொத்தம் 428,954 தொற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

சிங்கப்பூரில் புதன்கிழமை (பிப்ரவரி 9) நிலவரப்படி தொற்றுப் பாதிப்பால் மொத்தம் 1,205 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் 30 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் 111 பேருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனைகளில் கொவிட்-19 பாதிப்புக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஐந்தாவது நாளாக ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 1,194 பேர் தொற்றுப் பாதிப்பால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

சிங்கப்பூரில் அன்றாட கொவிட்-19 தொற்று எண்ணிக்கை புதன்கிழமை நிலவரப்படி 10,175க்கு குறைந்தது.

ஒப்புநோக்க செவ்வாய்க்கிழமை, இந்த எண்ணிக்கை 12,971ஆக இருந்தது.

நேற்று பதிவான தொற்றுப் பாதிப்பில் 7,661 பேருக்கு ஆன்டிஜன் விரைவு பரிசோதனை (ஏஆர்டி) மூலம் தொற்று கண்டறியப்பட்டது.

எஞ்சிய 2,514பேருக்கு பல்படியத் தொடர்வினை பரிசோதனை (பிசிஆர்) மூலம் தொற்று கண்டறியப்பட்டது.

கொவிட்-19க்கு மேலும் நால்வர் உயிரிழந்தனர்.