தீப்பிழம்பாக வெடித்த மோட்டார்சைக்கிள்

தீப்பிழம்பாக வெடித்த மோட்டார்சைக்கிள்

1 mins read
10cf5956-f6af-48d3-a237-a094ad072463
மோட்டார்சைக்கிள் கொளுந்துவிட்டு எரியும் காட்சிகள் (படம்: டிக்டாக்) -

பீ‌ஷானில் அமைந்துள்ள ஒரு கார் நிறுத்துமிடத்தில் இருந்து மோட்டார்சைக்கிள் திடீரென தீப் பிடித்து எரிந்தது.

தீப் பிழம்புகள் இரண்டு மீட்டர் உயரம் வரை வெடிப்பதைக் காணொளி காட்டுகிறது.

மோட்டார் சைக்கிளுக்குப் பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வாகனமும் தீயால் பாதிக்கப்பட்டது.

யாருக்கும் காயம் இல்லை.

புளோக் 172 பீ‌ஷான் ஸ்டீரிட் 13ல் அமைந்துள்ள திறந்வெளி கார் நிறுத்துமிடத்திடல் தீச்சம்பவம் நேற்று (பிப்ரவரி 9) நடந்தது.

முதலில் தீப் பற்றி எரிந்துக்கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் தீடீரென ஓர் உருண்டைத் தீப் பிழம்பாக வெடித்தது.

பொதுமக்களில் ஒருவர் இந்தச் சம்பவததைப் பதிவு செய்து தமது டிக்டாக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

சம்பவம் குறித்து இரவு பத்தரை மணியளவில் அழைப்பு கிடைத்ததாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைத் தெரிவித்தது.

தீச் சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.