பல்கலைக்கழகங்களுக்கு புதிய இலக்கு

அமைச்சர்: புதுப் பட்டதாரிகளை உருவாக்குவதோடு அரை மில்லியன் சிங்கப்பூரரை காலத்திற்கு ஏற்றாற்போல் மேம்படுத்த வேண்டும்

சிங்­கப்­பூ­ரில் உள்ள பல்­க­லைக்­கழகங்­கள், காலத்­தோடு சேர்ந்து தாங்­களும் மாறிக்­கொள்ள வேண்டும். புதிய பட்­ட­தா­ரி­களை உரு­வாக்­கு­வ­தோடு நின்­று­வி­டா­மல் ஏற்­கெ­னவே பட்­டம் பெற்­ற­வர்­கள் மீதும் அவை கவ­னம் செலுத்த வேண்­டும் என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் வலி­யு­றுத்­திக் கூறி இருக்­கி­றார்.

எதிர்­காலத் தேவை­களை நிறை­வேற்­றும் வகை­யில் பல்­க­லைக்­கழகங்­கள் எந்­தெந்த பணி­களை ஏற்க வேண்­டும் என்­பது பற்­றிய தனது இலக்கை நேற்று அமைச்­சர் அறி­வித்­தார்.

பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளின் பரி­ண­மிக்­கும் பணி­கள் பற்­றிய தி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் கல்விக் கருத்­தரங்­கம் 2022ல் அமைச்­சர் முக்­கிய உரை­யாற்­றி­னார்.

சிங்­கப்­பூ­ரர்­கள் ஒவ்­வோர் ஐந்­தாண்­டு­க­ளுக்கும் ஒரு முறை வேறு வேலைக்கு மாறிக்­கொள்ள வேண்­டிய தேவை இருக்­கிறது என்­பதே உண்மை நில­வ­ர­மாக உள்­ளது.

ஆகை­யால், சிங்­கப்­பூ­ரர்­கள் புதிய தேர்ச்­சி­க­ளை­யும் அறி­வை­யும் கற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய வேகம் தீவி­ர­ம­டைய வேண்­டும் என்று திரு சான் தெரி­வித்­தார்.

ஏறத்­தாழ 3 மில்­லி­யன் பேரைக் கொண்ட உள்­ளூர் ஊழி­யர் அணி யில் கிட்­டத்­தட்ட 20% முதல் 25 விழுக்­காட்­டி­னர் ஆண்­டு­தோ­றும் தங்­கள் தேர்ச்­சி­களை மேம்­படுத்திக்கொள்ள வேண்­டிய தேவை இருக்­கக்­கூ­டும் என்று அவர் கூறி னார். இதைச் சாதிக்க வேண்­டு­மா­னால் கல்வி முறையின் வெற்றி பற்­றிய சமூ­கத்­தின் எண்­ணம் மாற­வேண்­டும் என்றார் அமைச்­சர்.

பல்­க­லைக்­க­ழ­கங்­கள் ஒவ்­வோர் ஆண்­டும் ஊழி­யர் சந்­தைக்­காக 30,000 முதல் 40,000 மாண­வர்­களை நல்ல முறை­யில் உரு­வாக்­கு­வ­தோடு நின்­று­வி­டக் கூடாது.

ஒவ்­வோர் ஆண்­டும் சுமார் அரை மில்­லி­யன் பேரை மேம்­படுத்தி அவர்­களை ஊழியர் அணியில் தக்­க­வைத்­துக்கொள்­வ­தும் பல்­கலைக்­க­ழ­கங்­க­ளின் முக்­கிய பணியாக இருக்க வேண்­டும் என்று அமைச்­சர் தெரி­வித்­தார். புதிய குறிக்­கோளைச் சாதிக்­கும் வகை யில் கல்வி முறை மாற வேண்டிய நான்கு அம்­சங்­கள் பற்றி அமைச்சர் விளக்­கி­னார்.

கற்­றதை வைத்­துக்­கொண்டு சமா­ளித்­து­வி­ட­லாம் என்ற கோட்­பாடு அக­ல­வேண்­டும். தொடர்ந்து கற்று வரு­வதே வாழ்க்கை முழு­வதற்­கும் உத­வி­யாக இருக்­கும் என்­பதை சிங்­கப்­பூ­ரர்­கள் உணர வேண்­டும். வெற்­றிக்கு, முன்பே வரை­ய­றுக்­கப்­பட்ட ஒரு வழி இருக்­கிறது என்ற ஒரு யோச­னையை சிங்­கப்­பூர் புறம் தள்ள வேண்­டும்.

விரை­வாக பரி­ண­மிக்­கும் ஊழியர் சந்­தை­யில் மதிப்பை ஏற்­படுத்­தும் வகை­யில் தேர்ச்­சி­களும் அறி­வும் இடை­வி­டா­மல் தொடர்ந்து ஒன்று சேர்ந்து இடம்­பெற்று வர­வேண்­டும்.

தேர்ச்சி, அறி­வுச் சந்­தையை எட்­டு­வ­தற்­கான கால­ அ­ளவை சிங்­கப்­பூர் கல்வி முறை குறைக்க வேண்­டிய தேவை இருக்­கிறது.

முன்­னணி ஆய்­வு­கள், தொழில்­துறைத் தொழில்­நுட்­பங்­க­ளைக் கற்­பது, சந்தை நடை­மு­றை­க­ளின் முன்­னேற்­றங்­கள் ஆகி­ய­வற்றை கல்­வித் துறைக்குக் கொண்டு வந்து மீண்­டும் சந்­தைக்குக் கொண்டு போக வேக­மான முயற்சி­கள் இடம்­பெற வேண்­டும் என்று அமைச்­சர் தெரி­வித்­தார்.

ஒரே மக்­க­ளாக ஒரே கல்வி முறை­யாக இது நம்­மு­டைய போட்­டித்திறனை வரை­ய­றுக்­கும் என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

இதைச் சாதிக்க நேரடி பயிற்சிக் கல்வி, கல்வித் துறை, தொழில்­துறை, முன்­னாள் மாண­வர்­கள் ஆகி­யோரை எட்­டு­வ­தற்­கான தனது அணு­கு­மு­றையை நமது கல்வி முறை கூர்­தீட்ட வேண்­டும் என்­றும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!