சிங்கப்பூரில் புதன்கிழமை நிலவரப்படி 1,205 பேர் மருத்துவமனையில் கொவிட்-19 தொற்றுக்குச் சிகிச்சை பெற்றுவந்தனர். 30 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தனர்.
மருத்துவமனைகளில் செவ் வாய்க்கிழமை நிலவரப்படி 1,194 கொரோனா நோயாளிகள் அனு மதிக்கப்பட்டு இருந்தனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, ஐந்தாவது நாளாக புதன்கிழமையும் 1,000த்தைத் தாண்டியதாகவே இருந்தது.
அதேவேளையில், புதன்கிழமை புதிதாக தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 10,175 ஆகக் குறைந்தது. செவ்வாய்க்கிழமை இந்த எண்ணிக்கை 12,791 ஆக இருந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
புதிதாக தொற்றுக்கு ஆளானவர்களில் 2,514 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மூலம் தொற்று தெரியவந்தது.
ஏஆர்டி பரிசோதனை மூலம் 7,661 பேருக்குத் தொற்று இருந்ததுதெரியவந்தது.
வெளிநாடுகளில் இருந்து வந்த 139 பேருக்குத் தொற்று இருந்தது. கொவிட்-19 காரணமாக புதன்கிழமை நான்கு பேர் மரணமடைந்தனர்.
வாராந்திர தொற்று அதிகரிப்பு விகிதம் 2.0 ஆக இருந்தது.
புதன்கிழமை நிலவரப்படி சிங்கப்பூரில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 428,954 ஆகவும் மொத்த மரண எண்ணிக்கை 881 ஆகவும் இருந்தது.
மக்கள் தொகையில் முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அளவு 93%. கூடுதல் தடுப் பூசி (பூஸ்டர்) போட்டுக்கொண்டவர்கள் 61% என்று அமைச்சு தெரிவித்தது.

