கிருமித்தொற்று: பிப்ரவரி 14 வரை ஸ்ரீ சிவன் கோயில் மூடல்

1 mins read
ebd19aa2-8562-4699-ae56-ea6c9de8d6b8
-

ஸ்ரீ சிவன் கோயி­ல், கொவிட்-19 தொற்று காரணமாக பிப்­ர­வரி 14ஆம் தேதி வரை மூடி­யி­ருக்­கும்.

கேலாங் ஈஸ்ட் அவென்யூ 2ல் அமைந்­தி­ருக்­கும் ஸ்ரீ சிவன் கோயிலில் கொவிட்-19 தொற்று கண்­ட­றி­யப்­பட்­டதை அடுத்து அந்தக் கோயில் பிப்­ர­வரி 14ஆம் தேதி திங்­கட்­கி­ழமை வரை மூடப்­பட்­டி­ருக்­கும் என்று இந்து அறக்­கட்­டளை வாரி­யம் தனது ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று தெரி­வித்­தது.

ஸ்ரீ சிவன் கோயிலை இந்து அறக்­கட்­டளை வாரி­யம் நிர்­வ­கிக்­கிறது.

கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்ட சிலரை கோயில் வளா­கத்­தில் அடை­யா­ளம் கண்­டிருப்­ப­தாக வாரி­யம் ஃபேஸ்புக்­கில் கூறி­யது.

"பக்­தர்­க­ளின் நல­னை­யும் பாது­காப்­பை­யும் கருதி முன்­னெச்சரிக்கை நட­வ­டிக்­கை­யாக அன்­றா­டச் சேவை­கள் ரத்து செய்­யப்­படும்," என்­றது வாரி­யம்.

அத்­து­டன், பக்­தர்­க­ளின் புரிந்­து­ணர்­வை­யும் ஒத்­து­ழைப்­பை­யும் நாடுவ­தா­க­வும் அது கூறி­யது.

மேல்­வி­வ­ரங்­க­ளுக்குப் பொது­மக்­கள் இந்தக் கோயிலுடன் 67434566 என்ற எண்­ணில் தொடர்பு­கொள்­ள­லாம் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.