2 மீட்டர் உயரம் எரிந்து வெடித்த மோட்டார்சைக்கிள் கருகியது

2 மீட்டர் உயரம் எரிந்து வெடித்த மோட்டார்சைக்கிள் கருகியது

1 mins read
13e6dc00-dd9c-47f7-ba2a-e21138e6919f
பீஷான் ஸ்தி­ரீட் 13ல் உள்ள புளோக்­ 172ன் பக்­கத்­தில் இருக்­கும் திறந்­த­வெளி கார்ப்­பேட்­டை­யில் திடீரென ஒரு மோட்டார் சைக்கிள் இப்படி தீப்பிடித்து எரிந்தது. படம்: டிக்டாக் காணொளி -
multi-img1 of 2

பீஷான் ஸ்தி­ரீட் 13ல் உள்ள புளோக் 172ன் பக்­கத்­தில் இருக்­கும் திறந்­த­வெளி கார்ப்­பேட்­டை­யில் புதன்­கி­ழமை இரவு ஒரு மோட்­டார்­சைக்­கிள் திடீ­ரென தீப்­பி­டித்து எரிந்து நாச­மா­னது.

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை அந்­தத் தீயை அணைத்­தது.

இரண்டு மீட்டர் உயரம் பற்றி எரிந்த மோட்­டார்­சைக்­கி­ளுக்குப் பக்­கத்­தில் நிறுத்தி வைக்­கப்­பட்டிருந்த ஒரு காரும் பாதிக்­கப்­பட்­டது. இருந்­தா­லும் அந்­தச் சம்­ப­வத்­தில் யாருக்­கும் காய­மில்லை.

மோட்­டார்­சைக்­கிள் எரிந்­த­தைக் காட்­டும் டிக்­டாக் காணொளி புதன்­கி­ழமை இணை­யத்­தில் பதி­வேற்­றப்­பட்­டது.

அந்தப் படத்தை எடுத்த டான் யிங் யு என்ற 17 வயது மாண­வர், அந்த மோட்­டார்­சைக்­கி­ளுக்கு அரு­கில் சென்­ற­போது திடீ­ரென அது வெடித்­து­விட்­ட­தா­கவும் அத்­த­கைய காட்­சி­களைத் திரைப்­ப­டங்­களில் மட்­டுமே தான் பார்த்துள்ளதாக வும் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறி­னார். இந்­தச் சம்­ப­வம் பற்றி புலன்­வி­சா­ரணை நடந்து வரு­கிறது.