சில நுழைவாயில்களில் மின்னியல் சாலைக்கட்டணம் கூடுகிறது

சில நுழைவாயில்களில் மின்னியல் சாலைக்கட்டணம் கூடுகிறது

2 mins read
cf277d5a-0f7f-438a-af04-d4d93b5cc7c7
-

சிங்­கப்­பூர் சாலை­களில் செயல்­படும் சில நுழை­வா­யில்­களில் மின்­னியல் சாலைக் கட்­ட­ணம் (இஆர்பி) வரும் திங்­கட்­கி­ழமை முதல் $1 கூடும். நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் நேற்று இதனை அறி­வித்­தது.

ஆயர் ராஜா விரை­வுச்­சாலை, மத்­திய விரை­வுச்­சா­லை­யின் சில பகு­தி­களில் வாகனப் போக்­கு­வரத்தைச் சமாளிப்பதை இலக்­காகக்கொண்டு இம்மாற்­றம் இடம்­பெ­று­கிறது.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­ட­தைத் தொடர்ந்து ஜன­வ­ரி­யில் அதிக மக்­கள் வேலை­இடங்­க­ளுக்­குத் திரும்­பு­கிறார்­கள். இச்சூழ­லில் இந்­தக் கட்­டண உயர்வு நடப்­புக்கு வரு­கிறது.

ஆயர் ராஜா விரை­வுச்­சா­லையில் நகரை நோக்கி வரும்போது ஜூரோங் நக­ர­மன்­றத்தைக் கடந்­த­தும் மூன்று நுழை­வா­யில்­களில் கட்­டண மாற்­றம் இடம்­பெ­றும்.

காலை 8 மணி முதல் 8.30 மணி வரை கட்­ட­ணம் $1 ஆக இருக்­கும். காலை 8.30 முதல் 9.30 மணி வரை $2 ஆக இருக்­கும்.

ஆயர் ராஜா விரை­வுச்­சா­லை­யில் துவாசை நோக்­கிச் செல்­லும் போது நார்த் போன விஸ்­தாவை கடந்ததும் மாலை 6 மணி முதல் 7 மணி வரை $1 கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­படும்.

தெற்கு நோக்­கிச் செல்­லும் மத்திய விரை­வுச்­சா­லை­யில் நான்கு நுழை­வா­யில்­களில் காலை 9.30 மணிக்­கும் காலை 10 மணிக்­கும் இடை­யில் கட்டணம் $2.

வடக்கு நோக்­கிச் செல்­லும் மத்­திய விரை­வுச்­சா­லை­யில் இரு நுழை­வா­யில்­களில் மாலை 5.30 மணி முதல் மாலை 6 மணி வரை $2 கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­படும். மாலை 6.30 மணி முதல் 7 மணி வரை கட்­ட­ணம் $3ஆக இருக்­கும்.

இரவு 7 மணி முதல் 7.30 மணி வரை $1 கட்­ட­ண­மாக வசூ­லிக்­கப்­படும்.