கணினிச்சில்லு, மின்னணு, மருந்து தயாரிப்புத் தொழில்துறைகள் உலகளவில் மின்னிலக்க உருமாற்றத்தில் முன்னணியில் திகழ்கின்றன.
இந்தத் துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் அதிநவீன உற்பத்தித்துறை கோட்பாடுகளையும் தொழில்நுட்பங்களையும் பயனீட்டு முறைகளையும் முன்னதாகவே கைக்கொண்டு வருகின்றன.
சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகமும் உலகப் பொருளியல் அரங்கம் என்ற அமைப்பும் 'உற்பத்தித்துறை உருமாற்ற உள்கண்ணோட்ட அறிக்கை' என்ற ஓர் அறிக்கையின் இரண்டாவது பதிப்பை வெளியிட்டன. அதில் இந்த விவரங்கள் உள்ளன.
இந்த இரண்டு அமைப்புகளுக்கு இடைப்பட்ட 18 மாத பங்காளித்துவ உறவின் விளை வாக அந்த அறிக்கை உருவாக்கப்பட்டது.
30 நாடுகளைச் சேர்ந்த ஏறத்தாழ 600 உற்பத்தித்துறை நிறுவனங்களின் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு அந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
பொருளியல் வளர்ச்சிக் கழகம் 2017ல் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், ஆலோசனை நிறுவனங்கள் ஆகியவற்றோடும் இதர வல்லுநர்களோடும் சேர்ந்து 'விவேகத் தொழில்துறை ஆயத்த அட்டவணையை' உருவாக்கியது. அந்த நிறுவனங்கள் இந்த அட்டவணையில் இடம்பெற்றவை.
இந்த அட்டவணையே உற்பத்தித் தொழில்துறை நிறுவனங்களுக்கான உலகின் முதலாவது சுயேட்சை மின்னிலக்க முதிர்ச்சி மதிப்பீடாகும். உற்பத்தித் துறை யைச் சேர்ந்த பல்வேறு துறைகளிலும் பன்மயப்போக்கு அதிகமாகக் காணப்படுகிறது.
தொழில்துறை உருமாற்றத்திற்குச் சிறந்த முறையில் ஆதரவளிக்க தேவைக்கேற்ற துல்லியமான அணுகுமுறைகள் தேவை என்பதையும் அறிக்கை தெரியப்படுத்துகிறது.

