கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு எதிரான போரில் சிங்கப்பூரின் பங்களிப்பை வலுப்படுத்த உலகளாவிய உயிர்தொழில்நுட்ப நிறுவனமான ஜென்ஸ்கிரிப்ட் பயோடெக் 30,000 சதுர அடி பரப்பளவு கொண்ட உற்பத்தி நிலையத்தை நேற்று திறந்தது. சொலாரிஸ்@காலாங்கில் இந்தப் புதிய நிலையம் இயங்குகிறது.
இந்த நிலையத்தை அமைக்க $20.1 மில்லியன் செலவானது. மீண்டும் இணைக்கப்படும் புரதச்
சத்துகளையும் தொகுக்கப்பட்ட மரபணுக்களையும் நிலையம் உருவாக்கும். இவை ஆய்வுகளில் பயன்படுத்தப்படும். அதுமட்டுமன்றி புதிய தடுப்பூசி, மருந்துகள் ஆகியவற்றைத் தயாரிக்கவும் இவை பயன்படுத்தப்படும்.
இணையம் வழி நடத்தப்பட்ட திறப்பு விழாவுக்குப் பிறகு பேசிய ஜென்ஸ்கிரிப்ட் ஏஷியா பசிபிக்கின் தலைவரான திரு ஜான்சன் வாங், புதிய நிலையத்தில் கிட்டத்தட்ட 50 ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும் 100 பேர் வேலைக்கு எடுக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்
படுகிறது. வேலைக்கு எடுக்கப்
படுவோரில் பெரும்பாலானோர் சிங்கப்பூரர்களாக இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆய்வுக்கூடத் தொழில்நுட்பர்கள், விஞ்ஞானிகள், தளவாட ஊழியர்கள் முதலியோர் வேலைக்கு எடுக்கப்படுவர்.
சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பிறகு சிங்கப்பூரில்தான் இத்தகைய நிலையம் திறக்கப்பட்டுள்ளதாக ஜென்ஸ்கிரிப்ட் நிறுவனத்தின் உயிர் அறிவியல் பிரிவுத் தலைவர் டாக்டர் ரே சென் கூறினார்.

