சிங்கப்பூரில் வியாழக்கிழமை (பிப்ரவரி 1டி) நிலவரப்படி தொற்றுப் பாதிப்பால் மொத்தம் 1,211 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் 29 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் 115 பேருக்குச் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனைகளில் கொவிட்-19 தொற்றால் பாதிப்புக்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஆறாவது நாளாக ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
சிங்கப்பூரில் அன்றாட கொவிட்-19 தொற்று எண்ணிக்கை வியாழக்கிழமை நிலவரப்படி 10,452ஆக உள்ளது.
ஒப்புநோக்க புதன்கிழமை, இந்த எண்ணிக்கை 10,175ஆக இருந்தது.
நேற்று பதிவான தொற்றுப் பாதிப்பில் 7,964 பேருக்கு ஆன்டிஜன் விரைவு பரிசோதனை (ஏஆர்டி) மூலம் தொற்று கண்டறியப்பட்டது.
எஞ்சிய 2,578 பேருக்கு பல்படியத் தொடர்வினை பரிசோதனை (பிசிஆர்) மூலம் தொற்று கண்டறியப்பட்டது.
கொவிட்-19க்கு மேலும் ஒருவர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 144 பேருக்குத் தொற்று உறுதியானது.
வாராந்திர தொற்றுப் பரவல் விகிதம் வியாழக்கிழமை 2.26 ஆக இருந்தது. அதற்கு முந்தைய நாள் அது 2.0 ஆக இருந்தது.

