நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழு வெளியிட்ட அறிக்கை குறித்து பாட்டாளிக் கட்சி உறுப்பினரகள் அடுத்த வாரம் மன்றத்தில் தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துவர்.
அடுத்த வாரம் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தின் தொடர்பில், சிறப்புரிமைகள் குழுவின் பரிந்துரைகள் விவாதிக்கப்படும்.
பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தாம் சிங், ஃபைசல் மனாப், சில்வியா லிம் ஆகியோர் இது குறித்து பேசவுள்ளனர்.
பாட்டாளிக் கட்சி வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 11) அன்று விடுத்த அறிக்கையில் கூறியது.
பாட்டாளிக் கட்சியில் இருந்த முன்னைய நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் மன்றத்தில் பொய்யுரைத்த விவகாரத்தில், அவருக்கு $35,000 அபராதாம் விதிக்கவேண்டும் என்று நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குழு நேற்று கூறியிருந்தது.
அத்துடன் திரு பிரித்தம் சிங், திரு ஃபைசல் மனாப் ஆகியோரை கூடுதல் விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி இந்த விவகாரத்தை அரசாங்க வழக்குரைஞரிடம் ஒப்படைப்பதாக அறிக்கை கூறியது.
இவற்றை பெரும் கவலையுடன் கருத்தில் எடுத்துக் கொள்வதாகப் பாட்டாளிக் கட்சி வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
பாட்டாளிக் கட்சி உறுப்பினர் ஒருவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை கடைசியாக 1980களில் கொண்டுவரப்பட்டது என்றும் அக்கட்சி குறிப்படப்பட்டது.
சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரர்களுக்கும் தொடர்ந்து பணியாற்றவிருப்பதாகப் பாட்டாளிக் கட்சி கூறியது.

