சர்ச்சையை உண்டாக்கிய நியூயார்க் டைம்ஸ் கோழிக் கறி காணொளி அகற்றப்பட்டது

சர்ச்சையை உண்டாக்கிய நியூயார்க் டைம்ஸ் கோழிக் கறி காணொளி அகற்றப்பட்டது

1 mins read
39650713-7956-4f80-85a1-3063636cca79
சிங்கப்பூர் கோழிக் குழம்பு இப்படித் தான் இருக்கும் என்று கூறி, தங்களின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் காணொளி ஒன்றைப் பதிவேற்றம் செய்த நியூயார்க் டைம்ஸ், அக்காணொளியை அகற்றிவிட்டது. படம்: என்வொய்டிகுக்கிங்/இன்ஸ்டகிராம் -

சிங்கப்பூர் கோழிக் குழம்பு இப்படித் தான் இருக்கும் என்று கூறி, தங்களின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் காணொளி ஒன்றைப் பதிவேற்றம் செய்த நியூயார்க் டைம்ஸ், அக்காணொளியை அகற்றிவிட்டது.

இரு வாரங்களாக இந்தக் காணொளி பல தரப்பினரிடையே சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தது.

பழுப்பு நிறத்தில் கலங்கலாக, பார்க்க குழம்பு போன்றே இல்லாத ஒன்றை சிங்கப்பூர் கோழிக் கறி என்று கூறி காணொளியைப் பதிவேற்றம் செய்திருந்தது நியூயார்க் டைம்ஸ்.

சாக்கடைத் தண்ணீரைக் கோழிக் கறி என்றுகூறி ஏமாற்று வேலை செய்ததாக இணையவாசிகள் காணொளியைப் பெரிதும் சாடினர்.

பல கலாசாரங்கள் உள்ள சிங்கப்பூரில் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது சாப்பிடும் உணவுகளை நியூயார்க் டைம்ஸ் பதிவிட்டிருந்தது.

அதற்காக தமது சமையல் குறிப்பைப் பகிர்ந்துகொண்டார் சிங்கப்பூரைச் சேர்ந்த ஷீலா தாஸ்.

அதை தைப்பேயில் இருந்த அமெரிக்க செய்தியாளர் கிளேரிசா வெய் காணொளியில் செய்து காட்டினார்.

இருப்பினும் அவர் திருவாட்டி ஷீலாவின் சமையல் குறிப்பைக் காணொளியில் அப்படியே பின்பற்றவில்லை என்று நியூயார்க் டைம்சின் 'என்வொய்டிகுக்கிங்' அதன் இன்ஸ்டகிராம் பதிவில் குறிப்பிட்டது.

திருவாட்டி ஷீலாவின் கோழி பிரியாணி சமையல் குறிப்பை இரண்டு அம்சங்களாக பிரித்தது ஏன் என்று 'தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' கேட்ட கேள்விக்கும் நியூயார்க் டைம்ஸ் பதிலளிக்கவில்லை.

இந்நிலையில், காணொளி அகற்றப்பட்டதால் தமக்குத்தான் கூடுதல் நிம்மதி என்றும் பலர் தம்மைத் திட்டி மின்னஞ்சல் அனுப்பினர் என்றும் திருவாட்டி ஷீலா கூறினார்.