சில்லென்று சில இரவுகள்

சில்லென்று சில இரவுகள்

1 mins read
108459da-f58c-4bd6-9177-2a6ebfcd32e5
-

சிங்­கப்­பூ­ரில் அடுத்த ஒரு­சில இர­வு­கள் சில்­லென்று இருக்­கப் போகின்­றன. பிப்­ர­வரி முதல் இரண்டு வாரங்­களில் பெய்து வரும் கூடு­தல் மழை, வட­கி­ழக்கு பரு­வ­மழை ஆகி­யவை அதற்­குக் கார­ணம்.

தென்­கி­ழக்கு ஆசி­யா­வி­லும், தெற்கு ஆசி­யா­வி­லும் கூடு­தல் மழையை பெய்­யச் செய்­யும் லா நீனா விளை­வால், பரு­வ­நிலை சில்­லென்று இருக்­கிறது.

சிங்­கப்­பூர் சமூக அறி­வி­யல் பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த பரு­வ­நிலை ஆய்­வா­ளர் கோ தியன் யோங் நேற்று இதனை தெரிவித்தார். இத­னால் சிங்­கப்­பூ­ரி­லும் மலே­சிய தீப­கற்­பத்­தி­லும் வட­கி­ழக்கு பரு­வக்­காற்று அதி­க­மா­கிறது என்­றார் இணைப் பேரா­சி­ரி­யர் கோ.

சிங்­கப்­பூ­ரில் அடுத்த ஓர் அல்­லது இரண்டு இர­வு­களில் பரு­வ­நிலை சில்­லென்றுதான் இருக்­கும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

ஜன­வ­ரி­யின் கடைசி இரண்டு வாரங்­க­ளை­விட பிப்­ர­வரி மாதத்­தின் முதல் இரண்டு வாரங்­களில் கூடு­தல் மழையை எதிர்­பார்க்­க­லாம் என்று சிங்­கப்­பூர் வானிலை ஆய்­வுத் துறை முன்­ன­தா­கக் கூறி­யது.