கையூட்டு பெற்ற மேலாளருக்கு $25,000 அபராதம்

கையூட்டு பெற்ற மேலாளருக்கு $25,000 அபராதம்

1 mins read
70a0f9bd-714f-4db6-9bd3-3242b86d75b1
-

ஒரு நிறுவனத்தின் மேலாளராக இருந்த இயோ கே போ, 62, 'ஹய் ஹப் ஹுவாட்' நிறுவனத்தை நடத்தி வந்த டான் சீ கியோங் என்பவரிடமிருந்து கிட்டத்தட்ட $10,000 கையூட்டு பெற்றார். இவ்வாறு கிடைத்த பணத்தை கேடிவி கூடங்களிலும் உணவு உபசரிப்புகளிலும் இயோ தனக்கும் தன்னுடன் பணிபுரியும் இதர அதிகாரிகளுக்கும் செலவழித்தார். நேற்று இயோவுக்கு $25,000 அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் $10,000 தண்டப் பணத்தைச் செலுத்த வேண்டும் என்று உத்தரவு இடப்பட்டது. ஏற்கெனவே, 52 வயது டான்னுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு விட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது. அதிகாரிகளைத் தான் 'கவனித்துக்கொள்ள' விரும்புவதாக டான் கூறி இயோவுக்காவும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகளுக்காகவும் கேடிவியில் கட்டணம் செலுத்தியதை அடுத்து இயோ கையூட்டு பெறத் தொடங்கியதாக அறியப்படுகிறது.