'டோட்டோ'வில் $19மி பரிசைப் பகிர்ந்துகொண்ட எட்டுப் பேர்

'டோட்டோ'வில் $19மி பரிசைப் பகிர்ந்துகொண்ட எட்டுப் பேர்

1 mins read
284341af-ea20-40b0-b0cd-8020c9b68549
எட்டு அதிர்ஷ்டசாலிகளுக்குத் தலா $2.43 மி. கிடைத்தது (படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

'டோட்டோ ஹங்பாவ்'அதிர்ஷ்டக் குலுக்கில் எட்டு வெற்றியாளர்கள் முதல் பரிசைப் பகிர்ந்துகொண்டனர்.

மொத்த பரிசுத் தொகையான $19,416,908 ரொக்கத்தை வெற்றியாளர்கள் எட்டுப் பேருக்கிடையே பங்கிட்டால் ஒவ்வொருவருக்கும் தலா $2.43 மில்லியன் தொகை கிடைக்கும்.

நேற்று நடத்தப்பட்ட குலுக்கில் 9, 13, 14, 16, 18, 28 ஆகிய எண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. கூடுதல் எண் 10.

கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, இவ்வாண்டுக்கான பரிசுத் தொகையே ஆக அதிகம் என சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

சென்ற ஆண்டு பரிசுத் தொகை $9.6 மில்லியன்.

தொடர்புடைய செய்திகள்