தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'விடிஎல்' விமானப் பயணச்சீட்டு விலையேற்றம்

1 mins read
d1635b83-d3f8-43ca-8d70-462c6df2d1d2
சீனப் புத்தாண்டுக் காலத்தில் மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் விமானச் சீட்டுகளின் விலை உயர்ந்தது (படம்: எஃபி). -

மலேசியா-சிங்கப்பூர் இடையிலான தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதைக்கான (விடிஎல்) விமானப் பயணச்சீட்டின் விலை சீனப் புத்தாண்டுக் காலத்தில் உயர்ந்துள்ளது.

விடிஎல் பயணப் பாதை தொடங்கப்பட்டதிலிருந்து இரு நாடுகளிக்கிடையே அதிரித்துவரும் பயணிகளின் எண்ணிக்கை விலையுர்வுக்குக் காரணம் எனக் கூறப்பட்டது.

மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்கான விமானச் சீட்டின் விலை ஏறக்குறை 1,500 ரிங்கிட். இருவழி பயணத்துக்கான விலை சுமார் 2,200 ரிங்கிட்.

ஒப்புநோக்க விடிஎல் அல்லாத விமானச் சீட்டுகளின் விலை சுமார் 60 விழுக்காடு குறைவு.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசிய ஏர்லைன்ஸ், ஏர் ஆசியா, ஸ்கூட், மலிண்டோ ஏர், ஜெட்ஸ்டார் ஆசியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் விடிஎல் திட்டத்தின் கீழ் இரு நாடுகளுக்கிடையே பறக்கின்றன.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசிய ஏர்லைன்ஸ் ஆகியவை அடுத்த சில வாரங்களுக்கான விமான சீட்டுகளை விற்றுவிட்டன.

இதற்கிடையே தரை வழி பயணத்துக்கான பேருந்து டிக்கெட்டுகள் மார்ச் மாதம் வரை முழுமையாக விற்கப்பட்டுள்ளன.