காலத்திற்கு ஏற்ற கைத்தொழில்தான் கைகொடுத்து காக்கும்

காலத்திற்கு ஏற்ற கைத்தொழில்தான் கைகொடுத்து காக்கும்

4 mins read
034d2732-3568-4e1e-9dac-d89b696d4f02
-

முரசொலி

உல­கம் ஒவ்­வொரு நாளும் மாறு­கிறது. அதற்கு ஈடு கொடுக்­கும் வகை­யில் தொழில்­து­றை­களும் உருமாறி வரு­கின்­றன.

குறிப்­பாக இந்த நூற்­றாண்­டில் தொழில்­து­றை­களின் உரு­மாற்­றம் வேகமெடுத்து இருக்­கிறது. கணினி, இணை­யத்­தின் புழக்­கம் அதி­க­மா­ன­தும் புத்­தாக்­க­மும் புதுப்­புது கண்­டு­பி­டிப்­பு­களும் அவற்றுக்­கான அவ­சி­யங்­களும் தவிர்க்க இய­லா­மல் போனதை அடுத்து அவற்றின் விளை­வு­கள் தொழில்­து­றை­களில் எதி­ரொ­லி­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன.

மின்­னி­லக்க முறை வந்­த­போது அந்த உரு­மாற்ற வேகம் மேலும் கூடி­யது.

கொவிட்-19 கிருமி பரவி உல­கையே மாற்­றிய கால­கட்­டத்­தில் தொழில்­து­றைக்கு அதி­வேக உரு­மாற்­றத்தைவிட்டால் வேறு வழி இல்லை என்ற நிலை வேக­மாக ஏற்­பட்­டு­விட்­டது.

இந்த மாற்­றத்­திற்கு ஏற்ப மாறிக்­கொள்­ளும் துறை­கள்­தான் இனி வாழ முடி­யும் என்ற சூழல் ஏற்­பட்­டு­வ­ரு­கிறது. தொழில்­து­றை­கள் உரு­மா­று­வதால் நிறு­வ­னங்­கள் தலை­கீ­ழாக மாற வேண்­டிய நிலை ஏற்­பட்­டு­விட்­டது. அவை செயல்­படும் விதம் அடி­யோடு மாற்­றம் காண வேண்­டிய தேவை­யைத் தவிர்க்க இய­லாத ஒரு சூழல் தலை எடுக்­கிறது.

இவை கார­ண­மாக தொழில் நடத்­தும் முதலாளி­ கள் மட்­டு­மின்றி, தொழில்­து­றை­களில் வேலை செய்து பொருள் ஈட்டி வாழ்க்கை நடத்­தும் ஊழி­யர்­களும் மாறிக்­கொள்ள வேண்­டிய அவ­சர அவசியம் ஏற்பட்டு­விட்­டது. ஏட்­டுக் கல்­வி­ப் பட்­ட­த்தை அல்லது தொழிற்­கல்விப் பட்டத்தை மட்­டும் வைத்­துக்­கொண்டு கடை­சி­வரை வேலை பார்த்து வாழ்ந்­து­வி­ட­லாம் என்­பது இனி நடக்­காத ஒன்­றா­கி­விட்­டது.

பல புதிய தேர்ச்­சி­க­ளைக் கற்­றாக வேண்­டும்; அது­வும் வாழ்நாள் முழு­வ­தும் கற்­றா­க­ வேண்­டும் என்ற நிலை ஏற்­பட்­டுள்­ளது. கடந்த 2017ல் சரா­சரி வேலை ஒன்­றைப் பெறு­வ­தற்­குத் தேவைப்­பட்ட தேர்ச்­சி­களில் ஏறக்­கு­றைய மூன்­றில் ஒரு பங்கு தேர்ச்­சி­கள் 2021ல் தேவை­யில்லை என்ற நிலை உருவாகி இருப்­ப­தாக 'கார்ட்­ட­னர்' என்ற ஓர் ஆலோ­சனை நிறு­வ­னத்­தின் ஆய்வு ஒன்று குறிப்­பி­டு­கிறது.

இயற்­கை வளம் இல்­லாத, தன் மக்­கள் வளத்தை மட்­டுமே மூலா­தா­ர­மா­கக் கொண்­டுள்ள சிங்­கப்­பூர், இவற்றை எல்­லாம் முன்­ன­தா­கவே உணர்ந்­து­கொண்டு, 2015 ஆம் ஆண்­டி­லேயே 'ஸ்கில்ஸ்­ஃபியூச்­சர்' என்ற இயக்­கத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தி­யது.

உல­கி­லேயே ஆக­அ­திக ஆயு­ளைக் கொண்டுள்ள சிங்­கப்­பூ­ரர்­கள் ஆயுள் முழு­வ­தும் கற்று எப்­போதுமே காலத்­திற்கு ஏற்ற நிலை­யில் இருந்­து­வ­ர­வேண்­டும் என்ற நோக்­கத்­து­டன் தொடங்­கப்­பட்ட இந்த இயக்கம் படிப்­ப­டி­யாக வேக­ம­டைந்து விரும்­பிய பல­னைக் கொடுத்து வரு­கிறது. இந்த இயக்­கம் ஆத­ரவளிக்­கும் செயல்­திட்­டங்­களில் 2020ஆம் ஆண்டை விட 22% அதி­க­மாக சென்ற ஆண்­டில் ஏறத்­தாழ 660,000 பேர் கலந்துகொண்­ட­னர்.

இத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய பலா­ப­லன்­கள் உள்ளங்கை நெல்­லிக்­கனி போல் தெரி­கின்­றன. தக­வல்­தொழில்­நுட்­பம், சுக­ாதா­ரப் பரா­ம­ரிப்பு, நிபு­ணத்­துவ சேவைகள் ஆகி­யவை தொடர்­பான தேர்ச்­சி­க­ளைப் ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் உத­வி­யு­டன் கற்­றுக்கொண்­ட­தன் காரண மாக பல­ருக்­கும் நல்ல வேலை­கள் கிடைத்­துள்­ள­தா­கத் தெரி­ய­வந்­துள்­ளது.

அதோடு மட்­டு­மல்ல, ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் செயல்­திட்­டங்­களில் ஈடு­பட்ட நிறு­வ­னங்­க­ளின் எண்ணிக்கை ­யும் சென்ற ஆண்­டில் 70 விழுக்­காட்­டிற்­கும் அதி­க­மா­கக் கூடி கிட்­டத்­தட்ட 24,000 ஆகி­யது.

இவை ஒரு­பு­றம் இருக்க, 10,000க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­கள் ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் நிதி உத­வி­யைப் பயன்­ப­டுத்தி தங்­கள் ஊழி­யர்­க­ளுக்­குப் பயிற்சி வாய்ப்­பு­களை வழங்கி இருக்­கின்­றன.

இந்த வேகத்­திற்கு கொவிட்-19 தொற்­றும் ஒரு கார­ண­மாக இருக்­கிறது. தொற்று கார­ண­மாக நிறு­வ­னங்­க­ளி­டையே மின்­னி­லக்­க­மய வேகம் கூடியது. அப்­படி அவை உரு­மா­றிய கார­ணத்­தினால் வேலை­க­ளைப் புதிய பாணி­க­ளுக்கு மாற்ற வேண்டிய தேவை ஏற்­பட்­டது. அப்­படி உரு­வா­கும் புதிய வேலை­களைப் பார்க்க ஊழி­யர்­க­ளுக்­குப் புதுப்­புது தேர்ச்சி­கள் அவ­சி­ய­மா­யின.

கொரோ­னா­வால் பாதிப்­புக்கு உள்­ளான, வேலை­இழந்­து­விட்ட, பல­ரும் தேர்ச்­சி­களை மேம்­ப­டுத்­திக்­கொண்­டால்தான் தங்­க­ளுக்கு இனி வாழ்வு என்­பதை உணர்ந்­து­கொண்­ட­னர்.

புதுப்­புது தேர்ச்­சி­க­ளுக்­கான தேவை படு­வேகமாக அதி­க­ரிக்­கிறது என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

உலக ஊழி­யர்­களில் 40%க்­கும் மேற்­பட்­ட­வர்­கள் 2025ல் புதிய தேர்ச்­சி­க­ளைக் கற்­றுக்­கொள்ள வேண்டி இருக்­கும் என்று உல­கப் பொரு­ளி­யல் அமைப்பு முன்­னு­ரைத்து இருக்­கிறது.

சிங்­கப்­பூ­ரில் ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் இயக்­கம் இது­நாள் வரை ஊக்­க­மூட்­டும் பலன்­களை உரு­வாக்கி வரு­கிறது என்­றா­லும்­கூட, இதில் நாம் இன்­ன­மும் நெடுந்­தூ­ரம் செல்ல வேண்டி இருக்­கிறது என்­பதே உண்மை. பெரும்­பான்­மை ஊழி­யர்­கள் தேர்ச்­சி­களை மேம்­படுத்திக் கொள்ளவேண்­டிய நிலையில் இருக் கிறார்கள். அதோடு சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் கிட்டத்தட்ட 280,000 சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­களில் 10% நிறு­வ­னங்­கள்கூட ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் இயக்­கத்­தில் இன்­ன­மும் கலந்­து­கொள்­ள­வில்லை.

சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­களில் ஏறத்­தாழ மூன்­றில் இரண்டு பங்கு நிறு­வ­னங்­கள் மின்­னி­லக்­க­மய மாற்­றத்­தின் தொடக்­கக் கட்­டத்­தில் இருக்­கின்­றன. அவை முற்­றி­லும் உரு­மா­றும்­போது ஊழியருக்குப் புதிய தேர்ச்­சி­கள் அதிகம் தேவைப்­ப­டக்­கூ­டும்.

சிங்­கப்­பூ­ரர்­கள் ஆயுள் முழு­வ­தும் புதுப்­புது தேர்ச்சி­க­ளைக் கற்­றுக்­கெண்டு எப்­போதுமே வேலை சந்­தைக்­குப் பொருத்­த­மா­ன­வர்­க­ளாக இருந்து வரு வதைச் சாதிக்க ஊழி­யர் அணி­யின் தேர்ச்­சி­கள் பரந்த அள­வில் மேம்­பட வேண்­டும். இதில் நிறு­வனங்­கள் முன்­னின்று தலைமை ஏற்க வேண்­டும்.

ஊழி­யர்­க­ளி­டம் காணப்­ப­டக்­கூ­டிய குறை, நிறை­களைக் கண்­ட­றிந்து, எதிர்­காலத்தையும் கருத்­தில்­கொண்டு நிறுவனங்கள் பயிற்சித் திட்­டங்களை வகுக்க வேண்­டும், நிதி­யை­யும் ஒதுக்க வேண்­டும்.

இந்த முயற்­சி­யில் உயர்­கல்வி நிலை­யங்­க­ளுக்கும் பெரும் பங்கு இருக்­கிறது. சிங்­கப்­பூ­ரில் செயல்­படும் பல்­க­லைக்­க­ழ­கங்­கள் ஆண்­டு­தோ­றும் புதுப்புது பட்­ட­தா­ரி­களை உரு­வாக்­கு­வ­தோடு நின்­று­விடா­மல், ஏற்­கெ­னவே ஊழி­யர் அணி­யில் உள்­ள­வர்­க­ளின் தேர்ச்­சி­களை மேம்­ப­டுத்­து­வ­தி­லும் கவ­னம் செலுத்த வேண்டி இருக்­கும்.

ஊழி­யர்­க­ளின் மனப்­போக்­கும் மாற­வேண்­டும். ஒட்­டு­மொத்த முயற்­சி­க­ளின் பல­னாக ஊழி­யர்­கள், நிறு­வ­னங்­க­ளின் செயல்­தி­றன் கூடும்போது சிங்­கப்­பூ­ரின் செயல்­தி­ற­னும் உல­க­ள­வில் அதி­க­ரிக்­கும்.

சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் எதிர்­கா­லத்­திற்­கேற்ப மிக ஆற்­ற­லு­டன் திக­ழும். இதைச் சாதிக்­கும் தேர்ச்சி­யும் திற­னும் ஸ்கில்ஸ்­ஃபி­யூச்­சர் இயக்­கத்­துக்கு இருக்­கிறது என்பதில் ஐயமில்லை.