ஈராண்டுக்குப் பிறகு எஸ்ஐஏ ஆட்சேர்ப்பு

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் (எஸ்­ஐஏ) நிறு­வ­னம் கொவிட்-19 கார­ண­மாக கடந்த இரண்டு ஆண்டு கால­மாக வேலைக்கு ஆள் எடுக்­க­வில்லை. இப்­போது அது விமானங் களில் பணி­யாற்­றும் ஊழி­யர்­களை வேலை­யில் சேர்க்­கிறது.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் பயணம் மேற்­கொள்ள ஏது­வாக மேலும் பல நாடு­க­ளு­டன் பயண ஏற்­பா­டு­கள் நடப்புக்கு வரு­கின்­றன. இந்த நிலை­யில் அனைத்­து­லக விமா­னப் பய­ணங்­க­ளுக்­கான தேவை அதி­க­ரிக்­கிறது. அத­னால் ஊழி­யர்­கள் அதி­கம் தேவைப்­படுகிறார்­கள். இதற்­காக சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் விமானச் சிப்பந்திகளை வேலை­யில் சேர்க்­கிறது.

இந்த நிறு­வ­னம் நேற்று இது பற்றி தெரி­வித்­தது. எஸ்­ஐஏ 2020ஆம் ஆண்டு மார்ச் இறு­திக்­கும் ெசன்ற ஆண்டு மார்ச் இறு­திக்­கும் இடை­யில் மொத்­தம் 2,829 ஊழி­யர்­களை இழந்­து­விட்­டது. அவர்­களில் 2,379 பேர் விமானச் சிப்பந்திகள்.

விமா­னப் பய­ணி­க­ளின் எண்­ணிக்­கை­யை­யும் பய­ணி­க­ளின் சேவை­க­ளை­யும் தேவைக்­கேற்ப அதி­கப்­ப­டுத்தி வரும் எஸ்ஐஏ நிறு­வ­னம், இப்­போது தன்­னு­டைய இணை­யத்­த­ளம் வழி­யாக விண்­ணப்­பங்­களை வர­வேற்று ஏற்­றுக்­கொள்­கிறது. இருந்­தா­லும் எத்­தனை ஊழி­யர்­கள் வேலை­யில் புதி­தாக சேர்க்­கப்­ப­டு­வார்­கள் என்­பது பற்றி எஸ்­ஐஏ தெரி­விக்­க­வில்லை.

நிறு­வ­னத்­தின் வளர்ச்­சித் திட்­டங்­களை யும் கடந்த இரண்­டாண்­டு­களில் வேலை­யில் இருந்து வில­கி­விட்ட விமானச் சிப்பந்தி­க­ளுக்­குப் பதி­லாக புதிய ஊழி­யர்­க­ளைச் சேர்க்­க­ ஏற்­பட்டு உள்ள தேவையையும் கருத்­தில்­கொண்டு இந்த ஆகப் புதிய ஊழியர் சேர்ப்பு முயற்சி இடம்­பெ­று­வ­தா­க­எஸ்­ஐஏ தெரி­வித்­தது.

இந்த நிறு­வ­னம், சென்ற ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நில­வ­ரப்­படி, 6,887 விமான ஊழி­யர்­களை வேலை­யில் அமர்த்தி இருந்­தது. இந்த எண்­ணிக்கை முன்பு 9,266ஆக இருந்­தது. விமா­னச் சிப்­பந்­தி­களில் ஏறக்­கு­றைய கால்­வா­சிப் ­பேர் வேலை­யை­விட்டு சென்­று­விட்­டார்­கள்.

இப்­போது எத்­தனை பேர் வேலை பார்க்­கி­றார்­கள் என்­பது பற்­றிய விவ­ரங்­க­ளை­எஸ்­ஐஏ தெரி­விக்­க­வில்லை.

கொவிட்-19 கார­ண­மாக எல்­லை­கள் மூடப்­பட்­டன. விமா­னங்­கள் சேவை­களை நிறுத்­தி­விட்­டன. இதன் கார­ண­மாக பாதிக்­கப்­பட்ட எஸ்­ஐஏ நிறு­வ­னம், 2020 செப்­டம்­ப­ரில் பெரிய அள­வில் ஊழி­யர்­க­ளைக் குறைக்­கும் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டது.

எஸ்­ஐஏ, அதன் துணை நிறு­வ­ன­மான சில்க்­ஏர், மலிவுக் கட்­டண நிறு­வ­ன­மான ஸ்கூட் ஆகி­ய­வற்­றில் வேலை பார்த்த ஊழி­யர்­களில் ஏறக்­கு­றைய 4,300 பேரை ஆட்­கு­றைப்­புச் செய்ய எஸ்­ஐஏ குழு­மம் 2020 செப்­டம்­ப­ரில் முடிவு செய்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!