ஜனநாயக அடிப்படை மாண்புகளை எம்பிக்கள், கட்சிகள் உறுதிப்படுத்த அமைச்சர் வலியுறுத்து

ஜனநாயக அடிப்படை மாண்புகளை எம்பிக்கள், கட்சிகள் உறுதிப்படுத்த அமைச்சர் வலியுறுத்து

2 mins read
6aedabbe-4a7b-4c20-8a4f-5b70db000ddb
-

நேர்­மை­யும் நாண­ய­மும் சிங்­கப்­பூர் ஜன­நா­ய­கத்­தின் அடிப்­படை மாண்பு ­க­ளா­கத் தொடர்ந்து இருந்து வரு வதை உறு­திப்­ப­டுத்­தும் கட­மை­யும் பொறுப்­பும் நாடா­ளு­மன்ற உறுப்­பினர்­க­ளுக்­கும் அவர்­க­ள் பிர­தி­நிதிக்­கும் கட்­சி­க­ளுக்­கும் இருக்­கின்றன என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்துள்ளார்.

உட்­லண்ட்ஸ் ஹெல்த் வளா­கத்­தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்­து­கொண்ட அமைச்­சர் அதை­யொட்டி பேசி­னார்.

நாடு எப்­படி நிர்­வ­கிக்­கப்­பட வேண்­டும் என்­பது பற்­றிய வெவ்­வே­றான குரல்­களும் யோச­னை­களும் காரசார­மான விவா­திப்­பு­களும் இடம்­பெறுவது நல்­லதே என்று அவர் தெரி­வித்­தார்.

இருந்­தா­லும் அவை பொய் புரட்டு­களை அடிப்­ப­டை­யா­கக் கொண்­ட­வை­யாக இருக்­கக் கூடாது என்று அவர் தெரி­வித்­தார்.

நாடா­ளு­மன்ற சிறப்­பு­ரி­மைக் குழு­வின் முடி­வு­கள், பரிந்­து­ரை­கள் கார­ண­மாக ஜன­நா­ய­கத்­திற்குப் பாதிப்பு ஏற்­பட்டு இருக்­கிறது என்று பாட்­டா­ளிக் கட்சி கூறு­வது பற்றியும் சமூக ஊட­கங்­களில் வெளி­யாகி உள்ள கருத்­து­கள் தொடர்­பி­லும் அமைச்­சர் கருத்து கூறினார்.

நாடா­ளு­மன்ற நாய­கர் தலைமை யி­லான எட்டு உறுப்­பி­ன­ரைக் கொண்ட அந்­தக் குழு, பாட்­டா­ளிக் கட்­சி­யின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ரயீசா கான் நாடாளு­மன்­றத்­தில் பொய் சொன்ன விவ­கா­ரம் பற்றி ஆராய்­வ­தற்­காக அமைக்­கப்­பட்­டது. அந்­தக் குழு கடந்த வியா­ழக்­கி­ழமை ஓர் அறிக்­கையை வெளி­யிட்­டது.

திரு­வாட்டி கானுக்கு $35,000 அப­ரா­தம் விதிக்க வேண்­டும் என்று அது பரிந்­து­ரைத்­தது.

பாட்­டா­ளிக் கட்­சித் தலை­மைச் செய­லா­ள­ரும் எதிர்த்­த­ரப்பு தலை­வரு­மான பிரித்­தம் சிங், பாட்­டாளிக் கட்­சித் துணைத் தலை­வர் ஃபைசல் மனாப் இரு­வ­ருக்­கும் எதி­ராக குற்­ற­வி­யல் நட­வ­டிக்­கை­கள் எடுக்க வேண்டி இருக்­குமா என்­பது பற்றி பரி­சீ­லிக்­கும் வகை­யில் அந்த இரு­வரை­யும் அர­சாங்க வழக்­கறி­ஞர் நடத்­தும் புலன்­வி­சா­ர­ணைக்கு உட்­படுத்த வேண்­டும் என்­றும் அந்­தக் குழு பரிந்­து­ரைத்­தது.