சிங்கப்பூரின் சொந்த ‘தெமாசெக் அரிசி’ நெற்பயிர் அறுவடை; தெம்பனிஸ் செங்குத்து பண்ணையில் முதன்முதலாக கதிரடிப்பு

சிங்­கப்­பூ­ரி­லேயே உருவாக்கப்பட்டு பயி­ரி­டப்­பட்ட 'தெமா­செக் அரிசி' என்ற நெற்­ப­யிர் முதன்­மு­றை­யாக அறு­வ­டை­யாகி இருக்­கிறது.

நாட்­டின் உண­வுத் தேவைக்கு ஏற்­ப­டக்­கூ­டிய மிரட்­ட­லைச் சமா­ளிக்க நடை­மு­றைக்கு வரும் முன்­னோ­டித் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக சிங்­கப்­பூர் தெமா­செக் அரிசி ரக நெல் விளைச்­சல் சாதிக்­கப்­பட்டு இருக்­கிறது.

தெம்­ப­னிஸ் அவென்யூ 5ல் உள்ள புளோக் 146ன் சுவர் நெடு­கி­லும் அமைக்­கப்­பட்டு உள்ள செங்­குத்­தான உயர் தொழில்­நுட்­பப் பண்­ணை­யில் பயி­ரி­டப்­பட்ட தெமா­செக் அரிசி ரகநெல் நேற்று அறு­வ­டை­யானது. இப்­போ­தைக்கு அந்த அரிசி தெமா­செக் உயி­ராய்­வி­யல் ஆய்­வகத்தின் ஆய்வு உரு­வாக்க நோக்­கத்­திற்­காக மட்­டுமே பயன்­படுத்­தப்­படும்.

நக­ரச் சூழ­லில் நெற்­ப­யி­ரைப் பயி­ரி­டும் விதம் பற்றி அந்த ஆய்­வகம் மேலும் பல ஆய்­வு­களை நடத்­தும். இந்த முன்­னோ­டித் திட்­டத்­திற்கு தெம்­ப­னிஸ் நகர மன்­ற­மும் தெமா­செக் அற­நி­று­வ­ன­மும் இந்த ஆய்­வ­க­மும் ஆத­ர­வ­ளிக்­கின்­றன. நெல் அறு­வ­டையை வர­வேற்­றுப் பேசிய தெம்­ப­னிஸ் நகர மன்­றத் தலை­வி­யான திரு­வாட்டி செங் லி ஹுய், சிங்­கப்­பூர் வெளி­நா­டு­களில் இருந்து இறக்­கு­ம­தியாகும் உணவுப் பொருள்களையே பெரி­தும் சார்ந்­தி­ருப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

உண­வுப்­பொ­ருள்­கள் வரத்து பாதிக்­கக்­கூ­டிய மிரட்­டல் இருப்­ப­தை­யும் அவர் சுட்­டி­னார்.

தெமா­செக் நெல் ரகம் முத­லில் இந்த ஆய்­வ­கத்­தின் பசு­மைக் கூடங்­களில் விதையிடப்பட்டு நாற்று வளர்க்­கப்­பட்­டது. பிறகு சென்­ற­ஆண்டு அக்­டோ­ப­ரில் அந்த நாற்று­கள் புளோக் 146 செங்­குத்­துப் பண்ணை­யில் நடப்­பட்­டன.

இந்த ரக நெல் இந்­தோ­னீ­சி­யா­வில் 2016 முதல் வர்த்­தக நோக்­கத்­திற்­காக பயி­ர­டப்­படு­கிறது.

தெம்­ப­னிஸ் உயர் தொழில்­நுட்பப் பண்­ணை­யில் சொட்டு நீர்ப் பாசன முறை மூலம் பயி­ருக்குத் தண்­ணீர் கிடைக்­கிறது.

ஒரு வய­லில் ஒரு கிலோ அரி­சியை விளை­விக்க பொது­வாக 2,500 லிட்­டர் தண்­ணீர் தேவைப்­படும். ஆனால் சொட்டு நீர்ப் பாசன முறை மூலம் 750 லிட்­டர் தண்­ணீர் இருந்­தாலே போது­மா­னது என்று வல்­லு­நர் ஒரு­வர் குறிப்­பிட்­டார்.

தெமா­செக் நெல் ரகப் பயி­ருக்கு குறை­வான தண்­ணீரே போதும். இரண்டு வார காலம் கூட தண்ணீர் இல்­லா­மலே அது உயிர்­வாழ்ந்து­வி­டும். தெமா­செக் நெல்­ ர­கப் பயிர் ஒரு­பு­றம் இருக்க, தெம்­ப­னிஸ் பண்­ணை­யில் இதர கீரை வகை காய்­கறி­களும் பயி­ரா­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!