தோ பாயோ ஈஸ்ட்டில் வசிக்கும் ஞாபக மறதி குறைபாடுள்ள முதி யோருக்கும் அவர்களைப் பராமரிப்போருக்கும் மேலும் பல உதவிகள் கிடைக்கும்.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளின் தூண்களில் வண்ண அடையாளங்கள் வரையப்படுகின்றன. புளோக்குகளின் வரிசை எண் பெரிதாக எழுதப்படும். தோ பாயோ கிழக்கு குடிமக்கள் ஆலோசனைக் குழுவின் புதிய செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இவை இடம்பெறுகின்றன.
முதியோர் தங்களுக்கு ஞாபக மறதி குறைபாடு இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் குழு, சமூக சேவை அமைப்புகளுடன் சேர்ந்து பாடுபடும்.
பரிசோதனைகள் ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ஒரு முறை நடக்கும்.
தோ பாயோ ஈஸ்ட்டில் குறை வருவாய் குடும்பத்தினருக்கும் ஞாபக மறதி குறைபாடு உள்ளோருக்கும் உதவக்கூடிய 'மேங்கோ' செயல்திட்டம் விரிவடையும் என்றும் குழு தெரிவித்தது.

